ஆன்மிகம்ஆலோசனை

நவ தோஷங்களை போக்கும் போற்றி

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் சுலபமாக கையாள சில நேரங்களில் இறை வழிபாடு உதவுகிறது. அவற்றில் முக்கியமானது நவக்கிரக வழிபாடு. தினமும் நவக்கிரகங்களை வழிபட வேண்டும். ஒவ்வொரு நாட்களுக்குரிய கிரகங்களை வழிபடும் போது நல்ல பலன்களை பெற முடியும். நவ தோஷங்களை போக்கும் நவக்கிரக போற்றி கொடுத்துள்ளோம்.

  • எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் சுலபமாக கையாள சில நேரங்களில் இறை வழிபாடு உதவுகிறது.
  • முக்கியமானது நவக்கிரக வழிபாடு.
  • நவ தோஷங்களை போக்கும் நவக்கிரக போற்றி

108 நவகிரக போற்றி

  1. ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி
  2. ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி
  3. ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி
  4. ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி
  5. ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி
  6. ஓம் பொற்ப்பட்டுடையி பொழிவாய் போற்றி
  7. ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி
  8. ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி
  9. ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி
  10. ஓம் மூலாகினியில் முகிழ்த்தாய் போற்றி
  11. ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி
  12. ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி
  13. ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி
  14. ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி
  15. ஓம் சவுக்கவடிவில் இருந்தாய் போற்றி
  16. ஓம் முத்துவிமான வாகனா போற்றி
  17. ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி
  18. ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி
  19. ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி
  20. ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி
  21. ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி
  22. ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி
  23. ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி
  24. ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி
  25. ஓம் பூதேவி குமரா பெளமா போற்றி
  26. ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி
  27. ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி
  28. ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி
  29. ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி
  30. ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி
  31. ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி
  32. ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி
  33. ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி
  34. ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி
  35. ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி
  36. ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி
  37. ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி
  38. ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி
  39. ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி
  40. ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி
  41. ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி
  42. ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி
  43. ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி
  44. ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி
  45. ஓம் இளையை மணந்த எழிலே போற்றி
  46. ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி
  47. ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி
  48. ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி
  49. ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
  50. ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
  51. ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
  52. ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி
  53. ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
  54. ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
  55. ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
  56. ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
  57. ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
  58. ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
  59. ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
  60. ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி
  61. ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
  62. ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
  63. ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
  64. ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி
  65. ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
  66. ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
  67. ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
  68. ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
  69. ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
  70. ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
  71. ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
  72. ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி
  73. ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி
  74. ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி
  75. ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி
  76. ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி
  77. ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி
  78. ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி
  79. ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி
  80. ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி
  81. ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி
  82. ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி
  83. ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி
  84. ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி
  85. ஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றி
  86. ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி
  87. ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி
  88. ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி
  89. ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
  90. ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி
  91. ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி
  92. ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி
  93. ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி
  94. ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி ஓம்
  95. தவமேம் பட்ட தலையே போற்றி ஓம்
  96. இராஜபோகம் தரு இராகுவே போற்றி ஓம்
  97. இராகுவினுடலே கேதுவே போற்றி
  98. ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி
  99. ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி
  100. ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி
  101. ஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றி
  102. ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி
  103. ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி
  104. ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி
  105. ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி
  106. ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி
  107. ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி
  108. ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *