நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு சிறந்தது
நவராத்திரி என்ற சொல்லின் அர்த்தமான ஒன்பது இரவுகளில் துர்க்கை அம்மன் வெவ்வேறு வடிவத்தைக் கொண்டு காட்சியளிக்கிறார். துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்களையே நவதுர்க்கையாக நாம் வணங்குகிறோம்.
- ஒன்பது இரவுகளை கொண்டதே நவராத்திரி.
- 9 நாட்களுக்கும் 9 துர்க்கை அம்மனின் வடிவங்கள்.
- நவதுர்க்கையின் காயத்ரி மந்திரம்.
நவராத்திரி
பார்வதி தேவி மகிஷனை அழிப்பதற்காக துர்க்கை அம்மனாக அவதரித்தாள். துர்க்கையின் சொரூபம் ஒன்பது வடிவங்களின் சங்கமம். நவராத்திரியின் ஒன்பது நாட்களில் பார்வதிதேவி நவ துர்க்கையாக காட்சியளித்து விஜயதசமியன்று நவதுர்க்கைகளும் இணைந்து துர்க்கை அம்மனாக மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுரமர்த்தினி காட்சியளித்தாள்.
நவதுர்க்கை
பார்வதி தேவியின் நவதுர்க்கை அவதாரங்கள் இதோ: ஷைலபுத்ரி, பிரம்மச்சாரினி, சந்திரகாந்தா, குஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, கத்யாயணி, காலராத்ரி, மஹாகௌரீ மற்றும் ஸித்திதாத்ரி.
நவதுர்க்கை ஸ்லோகங்கள்
நவராத்திரியில் நவ துர்க்கையை வழிபடுவது நன்று. 1 நாள் முதல் 9 நாட்கள் வரை ஷைலபுத்ரி துவங்கி ஸித்திதாத்ரி வரை பார்வதி தேவியின் நவதுர்க்கை சொரூபத்தை வழிபடும் ஸ்லோகங்களை கூறி பூஜை செய்வது விசேஷம்.
ஸ்ரீ ஸைலபுத்ரீ
வன்தே வாஞ்சிதலாபாய சன்த்ரார்தக்றுதஸேகராம்
வ்றுஷாரூடாம் ஸூலதராம் ஸைலபுத்ரீ யஸஸ்வினீம்
ஸ்ரீ ப்ரஹ்மசாரிணீ
ததானா கரபத்மாப்யாமக்ஷமாலா கமண்டலூ
தேவீ ப்ரஸீதது மயி ப்ரஹ்மசாரிண்யனுத்தமா
ஸ்ரீ சன்த்ரகண்டேதி
பிண்டஜப்ரவராரூடா சன்தகோபாஸ்த்ரகைர்யுதா
ப்ரஸாதம் தனுதே மஹ்யம் சன்த்ரகண்டேதி விஸ்ருதா
ஸ்ரீ கூஷ்மாம்டா
ஸுராஸம்பூர்ணகலஸம் ருதிராப்லுதமேவ ச
ததானா ஹஸ்தபத்மாப்யாம் கூஷ்மாண்டா ஸுபதாஸ்து மே
ஸ்ரீ ஸ்கன்தமாதா
ஸிம்ஹாஸனகதா னித்யம் பத்மாஸ்ரிதகரத்வயா
ஸுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கன்தமாதா யஸஸ்வினீ
ஸ்ரீ காத்யாயணீ
சன்த்ரஹாஸோஜ்ஜ்வலகரா ஸார்தூலவரவாஹனா
காத்யாயனீ ஸுபம் தத்யாதேவீ தானவகாதினீ
ஸ்ரீ காலராத்ரி
ஏகவேணீ ஜபாகர்ணபூர னக்னா கராஸ்திதா
லம்போஷ்டீ கர்ணிகாகர்ணீ தைலாப்யக்தஸரீரிணீ
வாம பாதோல்லஸல்லோஹலதாகண்டகபூஷணா
வர்தனமூர்த்வஜா க்றுஷ்ணா காலராத்ரிர்பயங்கரீ
ஸ்ரீ மஹாகௌரீ
ஸ்வேதே வ்றுஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதரா ஸுசிஃ
மஹாகௌரீ ஸுபம் தத்யான்மஹாதேவப்ரமோததா
ஸ்ரீ ஸித்திதாத்ரி
ஸித்தகன்தர்வயக்ஷாத்யைரஸுரைரமரைரபி
ஸேவ்யமானா ஸதா பூயாத் ஸித்திதா ஸித்திதாயினீ
கேட்ட வரம் கொடுக்கும் தேவியே கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் தேவியே மக்கள் அனைவரையும் காத்து ரக்ஷிப்பாயாக.