வீட்டில கருப்புத் தங்கம் தயாரிக்கலாங்க வாங்க
நாம் தினம்தோறும் உண்ணும் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்த உணவா? இயற்கையில் தயாரித்த உணவா? ரசாயனம் கலப்படம் இல்லாததா? இப்படி உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொள்ளுங்கள். பதில் ஆம் என்றால் நீங்கள் ஆரோக்ய சாலி. இல்லை என்றால் அதை எப்படி சரி செய்வது நாமே முயற்சி செய்யலாமே.
அதெப்படின்னு பார்க்கலாம் வாங்க, உங்கள் விட்டிலே நிங்களே கருப்புத் தங்கம் தயாரிக்க முடியும் அது எப்படினு பார்க்கலாம். அதென்னப்பா கருப்புத்தங்கம்னு கேட்பது தெரிகின்றது. இந்த கருப்புத்தங்கங்கம் நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் ஒன்றாகும்.
நம் வீட்டில் செடியாகவோ அல்லது மாடி தோட்டமாகவோ அல்லது வராண்டாவில் நிறைய இடம் இருந்தால் இதற்கு என்று சிறிது இடம் ஒதுக்கி நேரத்தை சிறிது செலவிட்டால் ஆரோக்யசாலியாக உங்கள் குடும்பத்தை மாற்ற முடியும். அதுசரி அது எப்படி முடியும், செடி வளர்த்தால் அதுக்கு தேவையானதை எல்லாம் செய்ய வேண்டும் செடிக்கு நல்ல உரம் போடனுமே அதுக்கு எங்கப் போறது என்று யோசிக்க வேண்டாம். உங்கள் வீட்டில் நீங்கள் வைக்கும் செடி கொடிகளுக்கு நீங்களே உரம் தயாரிக்கலாம். அதுவும் இயற்கையாக தயாரிப்பதுதான் அது, அதனைத்தான் கருப்புத்தங்கம் என்கின்றோம்.
இயற்கையாக உரம் தயாரிக்க வேண்டும். அது மண் புழு உரம். இதை எளிதாக வீட்டில் இருக்கும் கழிவுகளை கொண்டு நாமே தயாரிப்பதுதான், சிறு தொழிலாகவும் இதை செய்ய முடியும். இதனை பல சுய உதவிக் குழு பெண்கள் செய்கின்றனர்.
கருப்பு தங்கம் செய்முறை அறிவோமா வாங்க!
தேவையான அளவு மண், காய்கறி கழிவுகள், மாட்டுச்சாணம், மண் புழு, மக்க கூடிய இலைதழைகள், அழுகிய காய்கறிகள் மற்றும் அழுகிய பழங்கள்.
மாட்டுச் சாணம், மக்கக்கூடிய இலை தழைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என எல்லாவற்றையும் ஈரப்பதம் கலந்த மண்ணில் போட்டு, மாட்டுச் சாணத்தை கரைத்துத் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அந்த மண்ணில் போட்ட அத்தனை பொருட்களும் மக்கிவிடும்.
இதன்பிறகு இதில் தண்ணீர் விடக்கூடாது. காற்று படும்படி வைக்கவும். ஒரு மாதத்தில் இந்த உரம் தயாராகி விடும். பிறகு மண் புழு தனியாகவும், உரம் தனியாகவும் பிரித்து பாக்கெட் செய்து கொள்ளவும். இந்த உரத்தை இயற்கையாக நம் தோட்டத்திற்கும், செடிகளுக்கும் பயன்படுத்தலாம். பிறருக்கு விற்பனையும் செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் உள்ளதால் விற்பனைக்கு பஞ்சமில்லை. தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது அதிக நன்மை தரும். விவசாயம் மற்றும் தரிசு நிலம் மேம்பாட்டிற்கும் உதவும். வீட்டில் செடி வளர்ப்பவர்கள் இதை உபயோகப்படுத்தலாம். மண் புழுக்களை கோழிக்கு தீனியாக பயன்படுத்தலாம். நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர்.
இது போன்ற மண்புழு உரம் இயற்கையாக தயாரித்து வைத்து கொள்ளுங்கள். வீட்டின் கழிவுகளை வைத்து தயாரிப்பதால் உரம் வாங்கும் செலவு மிச்சம் ஆகும். இதை விற்று வருமானமும் ஈட்டலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
Pingback: உங்களுக்கு நியாபகம் இருக்கா…!!! | SlateKuchi