செய்திகள்

உக்ரைனில் போர் மேகம்:- நேட்டோ என்ன செய்கிறது..?

நோட்டோவின் உறுப்பு நாடாக உக்ரைன் இல்லாததால் ராணுவ ரீதியாக அமெரிக்கா உதவுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், உக்ரைன் நோட்டோவின் நெருங்கிய நண்பனாக இருப்பதால், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களையும், உக்ரைன் வீரர்களுக்கு தேவையான பயிற்சிகளை நோட்டோ நாடுகள் வழங்கி வருகிறது. மேலும் ரஷ்யா சைபர் தாக்குதலில் சிறந்தவர்கள் என்பதால், சைபர் தாக்குதலில் இருந்து உக்ரைனை பாதுகாக்க தேவையானவற்றை நேட்டோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தை வலுப்படுத்தும் உக்ரைன்:-

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பால்டிக் நாடுகள் உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ஆயுதங்கள் மற்றும் படகுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியுள்ளன. மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக கிழக்கு உக்ரைனில் உக்ரேனிய இராணுவம் பயன்படுத்திய ட்ரோன்களை துருக்கி உக்ரைனுக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக உதவ ஜெர்மனி மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், மருத்துவம் தொடர்பான உதவிகளை வழங்குவது உறுதி தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு துறை சுமார் 8,500 க்கும் மேலான அமெரிக்க துருப்புக்களை உஷார் நிலையில் வைத்துள்ளது. டென்மார்க் பால்டிக் கடலுக்கு ஒரு போர்க்கப்பலையும் லிதுவேனியாவுக்கு நான்கு F-16 போர் விமானங்களையும் அனுப்புயுள்ளது. மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடலுக்கு ஸ்பெயின் ஒரு கண்ணிவெடி மற்றும் போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.

எவ்வளவு படைகள் உக்ரைனுக்கு சென்றாலும், அது உக்ரைனுக்கே அழிவை உண்டாக்கும். நோட்டோ நாடுகளுக்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *