விளையாட்டு

தேசிய விளையாட்டு தினத்தில் தயான் சந்த்

தேசிய விளையாட்டு தினமான இன்று, இந்தியாவுக்கு தனது விளையாட்டு துறையில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்துக் கொண்டிருந்தது. ஹாக்கி நாயகன் தயான் சந்த் பிறந்த தினம் இன்று. அவர்களைக் கௌரவித்து இன்றைய தினம் அவரை எண்ணி நாடு முழுவதும் விளையாட்டு வீரர்களை அங்கிகரிக்க இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹாக்கி விளையாட்டில் இந்தியா சுதந்திரத்திற்கு காலத்திற்கு முன்பே கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது விளையாட்டில் இந்தியா தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற்று வந்தது குறிப்பிடத் தக்கதாகும். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரர் தயான்சந்த் ஆவார்கள்.

தயான்சந்த் இந்திய அணியின் ஹாக்கி விளையாட்டின் கேப்டனாகச் சிறந்து விளங்கினார். தயான்சந்த் கேப்டனாக இருந்த அந்தக் காலம் அனைத்தும் பொற்காலமாகப் போற்றப்படுகின்றது. தயான் சந்துக்கு சந்த் என்ற பெயரானது அவர்கள் அவர்களுடைய நண்பர்கள் வைத்த பெயராகும். தயான் சந்த் ஹாக்கி விளையாட்டின் இரவும் பகலும் பார்க்காமல் விளையாடி வந்தார் அதன் காரணமாக அவருடைய நண்பர்கள் அவருக்கு இந்தப் பட்ட பெயர் சூட்டியுள்ளனர். இவர் நிலவைப் போன்று மங்காத பணியாற்றுபவர் என்பதை குறிக்கும் வகையில் அவருக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது.

இந்தியா தன்னுடைய அசாத்தியமான இந்த மாபெரும் வெற்றிக்கு மாபெரும் உறுதுணையாக தயான்சந்த் அவர்கள் சிறந்து விளங்கினார். என்றும் தி பெஸ்ட் விசார்டு அதாவது மந்திரவாதி என்றும் அவரை அழைத்து வந்தனர். தயான் சந்த் அவர்கள் ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும்போது 400க்கும் மேற்பட்ட கோல்களை எடுத்து இருக்கின்றார்.

1928ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் 14 கோல்கள் அடித்து சாதித்த இந்தியர் என்ற பெருமை சேர்த்திருக்கிறார் இந்தியா ஒலிம்பிக்கை வென்றது. அன்று ஒரு பெரும் சாதனை எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்தில் தயான் சந்த் அவர்கள் செய்து கொடுத்திருந்தார். 1932ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்காவை 24 1 என்ற கோல் வெற்றி வித்தியாசத்தில் வென்றது. ஜப்பான் 11 கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த மாபெரும் சாதனையைத் தயான்ச் சந்த் அவர்கள் செய்து முடித்தார்.

தயான் சந்த் அவர்கள் நாட்டிற்காக ஹாக்கி விளையாட்டில் பெறும் சாதனையைச் செய்து நாட்டின் புகழ் உச்சிக்கு செல்ல செய்திருக்கின்றார். இவர் பலவித கோல்கள் அடித்திருக்கிறார் வாழ்க்கை பயணத்தைத் “தி கோல்” என்றும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இந்திய விளையாட்டு வீரர்களுக்குத் தயான்சந்த் ஒரு முன்மாதிரி ஆவார். உலகையே விரட்டிய ஹிட்லர் இந்திய தயான்சந்த் ஐ பார்த்துப் பெருமை பெற்றிருக்கின்றார்.

1936ஆம் ஆண்டு இந்தியா ஜெர்மனி ஒலிம்பிக் போட்டியில் விளையாடியபோது இந்தியா அப்போது வென்றது ஹிட்லர் ஜெர்மனி தோற்ற கவலையில் இருந்தாலும் தயான்சந்த் ஆட்டத்தை பார்த்து பெருமிதப்பட்டார். தயான் சந்திற்கு ஜெர்மனியில் மேஜர் பதவி மற்றும் ஜெர்மனி நாட்டு உரிமை ஆகிய அனைத்தும் கொடுத்து ஹிட்லர் கௌரவப்படுத்தி இருந்தார். ஹிடலர் தயான் சந்தை பெருமிதமாகப் படுத்தினார்.

ஹிட்லர் செய்த கௌரவத்தை தயான் சந்த் அவர்கள் பணிவுடன் மறுத்து நன்றி தெரிவித்தார். 1952இல் தயான்சந்த் அவர்களின் சுயசரிதை மெட்ராஸின் ஸ்போர்ட்ஸ் அண்ட் பாஸ் டைம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். தீவிரமான வெறி விளையாட்டில் வெற்றி நாட்டில் பெருமை ஆகிய அனைத்தையும் உள்ளுணர்வுடன் கொண்டு விளையாடிப் பெருமை, சேர்த்தவர் மேஜர் தயான் சந்த் அவர்கள்.

தயான் சந்த் இந்தியாவின் பெருமைக்குரியவர் ஆவார். அவர் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 இந்தியா தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடி வருகின்றோம். இந்திய மண்ணையும் நேசித்து இந்திய மக்களைப் பெருமைப்படுத்திய தயான்சந்த் வழிவந்தவர்கள் தான் நாம், ஆனால் இந்தியாவில் இன்னும் ஒலிம்பிக்கில் தங்கங்கள் பல பெறுவது நம்மால் சவாலாக இருக்கின்றது 130 கோடி பேர் கொண்ட தேசத்தில் வெறும் 59 பேர் ஒலிம்பிக் போட்டிக்காக உத்வேகத்துடன் செல்கின்றனர். அவர்களில் 5 அல்லது 10 பேர் மட்டும்தான் பதக்கங்கள் பெறுகின்றனர்.

இந்தியாவில் விளையாட்டுக்கான அங்கீகாரம் வெகுகுறைவாக இருக்கின்றது. ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே உச்சாணிக் கொம்பில் வைத்து ஆடப்படுகின்றன. இதனால் பல போற்றப்பட வேண்டிய விளையாட்டுக்கள் முகவரி தெரியாமல் இருக்கின்றன.

தயான் சந்த் பிறந்த தினமான இன்று அவரை எண்ணி பெருமைப்பட்டு அவரைப்போல் நாமும் சாதனைகள் பல படைத்து வெல்வோமாக இந்தியாவில் அடுத்த ஒலிம்பிக் செல்லும் அணிகள் மற்றும் விளையாட்டுக்கான வீரர்களை முறையாக இனம் கண்டு அவர்களைப் பயிற்சி கொடுத்து ஜெயிக்க வைக்க வேண்டிய கடமையில் நாம் இருக்கின்றோம். ஏதோ ஒருசில விளையாட்டுக்கு மட்டும் அதிகமான ஆதரவு கொடுப்பது என்பது அவ்வளவு சிறந்தது அல்ல. இன்று தேசிய விளையாட்டுத் தினம் இந்நாளில் இன்னும் ஆயிரமாயிரம் அடையாளம் தெரியாத தயான் சந்த் கண்டுபிடிப்போம் பதக்கங்கள் பல பெறுவோம் பாரதத்தை பெருமை படுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *