Tnpsc tips: டிஎன்பிஎஸ்சி தேர்வு கேட்கும் தேசத் தலைவர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும் பகுதி – 3
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : வாணிதாசன்
2. தமிழ்நாட்டின் சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : புதுமைப்பித்தன்
3. புதுக்கவிதையின் பிதாமகன் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : நா. பிச்சமுத்து
4. வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : ஈ. வே. ரா.
5. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : உ. வே. சாமிநாத ஐயர்
6. தமிழ் நாடகவியலின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : பம்மல் சம்பந்த முதலியார்
7. தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : சங்கரதாஸ் ஸ்வாமிகள்
8. முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : கி.ஆ.பெ. விஸ்வநாதம்
9. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : மறைமலை அடிகள்
10. பைந்தமிழ்த்தேர்ப்பாகன் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : பாரதியார்