கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc tips: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் தேச தலைவர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும் பகுதி – 2

போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்

முக்கிய வினா விடைகள்

1.மனிதருள் மாணிக்கம் என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : ஜவஹர்லால் நேரு

2. தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : திரு. வி கல்யாண சுந்தரானார்

3. தேசபக்தர்களின் தேசபக்தர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : சுபாஷ் சந்திரபோஸ்

4. தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : அறிஞர் அண்ணா

5. கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : கம்பர்

6. திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : கால்டுவெல்

7. மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : தேவநேய பாவாணா

8. தனித்தமிழ் இசை காவலர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : ராசா அண்ணாமலை செட்டியார்

9. தமிழ் நாவலின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : மாயூரம் வேதநாயகம் பிள்ளை

10. சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை : வ. வே. சு ஐயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *