Tnpsc tips: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் தேசத் தலைவர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும் பகுதி -1
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : சர்தார் வல்லபாய் பட்டேல்
2. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : கவிக்குயில் சரோஜினி நாயுடு
3. இந்தியாவின் முதல் பெரும் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : தாதாபாய் நௌரோஜி
4. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : ராஜாராம் மோகன்ராய்
5. இந்தியாவின் லோக்நாயக் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஜெயபிரகாஷ் நாராயணன்
6. இந்தியாவின் தேசபந்து என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : சித்தரஞ்சன் தாஸ்
7. இந்தியாவின் தீனபந்து என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : சி.தி. ஆண்ட்ரூஸ்
8. இந்தியாவின் பங்கபந்து என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஷேக் முஜிபுர் ரஹ்மான்
9. இந்தியாவின் குருதேவ் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : ரவீந்திரநாத் தாகூர்
10. இந்தியாவின் அமைதி மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : லால்பகதூர் சாஸ்திரி