தேசிய தொழிற்பயிற்சி மையம் வேலைவாய்ப்பு முகாம் – சென்னை
தேசிய தொழிற் பயிற்சி மையத்தின் மண்டல வேலைவாய்ப்பு துணை அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளன. தேசிய தொழிற்பயிற்சி மையம் பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு சென்னையில் வரும் 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. தேவையான தகுதி மற்றும் அனுபவம் பெற்றுள்ள பொதுப்பிரிவினருக்கு முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன.
- தேசிய தொழிற் பயிற்சி மையத்தின் மண்டல வேலைவாய்ப்பு
- சென்னையில் வரும் 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
- 18ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடக்கிறது.

புதிய, அனுபவமிக்கவருக்கு வேலை வாய்ப்பு
18ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடக்கிறது. மனிதவள மேம்பாடு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்களில் புதியவர்களுக்கும், அனுபவமிக்கவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்பு துறை
வங்கி, காப்பீடு, மின் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, வேகமாக விற்பனையாக கூடிய நுகர்வோர் பொருட்கள், உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. மாதம் ரூபாய் 10,000 முதல் 30,000 வரை ஊதியம் வழங்கப்படும். 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

தகுந்த பணிகளுக்கு தேர்வு
பட்டதாரிகளுக்கும் அதைவிட அதிக கல்வித்தகுதி உடையவர்களும் முன்னுரிமை அளிக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் தகுந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக முகம் இடத்திற்கே சென்று தங்களது பெயர்களை பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு தேசிய தொழிற் பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இணையத்தில் பதிவு
இணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்த வேண்டும். ஆவணங்களின் நகல்களையும், அசலையும் முகாமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-24615112 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.