Imagesசினிமாசெய்திகள்தேசியம்

தேசிய கைத்தறி தினத்திற்கு பிரபலங்களின் வாழ்த்துக்கள்

நெசவாளர்களை கௌரவிக்கும் பொருட்டு தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7 எல்லா வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய கைத்தறி தினம்

நாட்டின் பொருளாதாரத்தில் கைத்தறியின் பங்கு மற்றும் கைத்தறியை அங்கீகரிக்கப்பட்டு வருடாந்திர வருமான அதிகரிப்பு இவை அனைத்தும் செயல்படுத்தப்படும் நாளாக கருதப்பட்டு எல்லா வருடமும் ஆகஸ்ட் 7 கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்து வருடத்திற்கு முன்பு 2015 மத்திய அரசாங்கம் ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆகஸ்ட் 7 என்ற தேதி வரலாற்று நிகழ்வை கொண்டது. வங்காளத்தை பிரிக்க வெள்ளையர்கள் முற்பட அதனை எதிர்த்து 1905 கல்கத்தா டவுன் ஹாலில் தொடங்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக ஆகஸ்டு 7 தேசிய கைத்தறி தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிரதமரின் வாழ்த்து

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றைய தின நல்வாழ்த்துக்களை காணொளி மூலம் பகிர்ந்துள்ளார். நெசவாளர்களுக்கு சல்யூட் அடிப்பதோடு அவர்களின் இந்தக் கலை கொடுக்கும் பங்கிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். கைத்தறிக்கு குரல் கொடுத்து ஆதரவு தெரிவிப்போமாக என அந்த ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

திரை உலகம்

கதாநாயகிகள் நெசவாளர்களையும் கைத்தறி கலையையும் சிறப்பிக்கும் வகையில் நமது கலாச்சாரமான புடவையின்போஸ் கொடுத்து தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடி வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளனர்.

தமிழ் திரையுலகில் ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது வில்லியாக நடித்துக் கொண்டிருப்பவர் சிம்ரன். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெசவாளர்களை அழகிய புடவை செய்யும் மந்திரவாதிகள் குறிப்பிட்டு பாராட்டி நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய டாப்ஸி பன்னு புடவையில் தான் தாம் மிகுந்த அழகுடன் காட்சியளிப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு அழகிய புடவையில் போஸ் கொடுத்து இன்றைய தின சிறப்பு வாழ்த்துக்களை பகிர்ந்து பட்டையைக் கிளப்பியுள்ளார்.

கலாச்சாரம் மிக்க இந்திய தேசத்தில் நெசவாளர்களுக்கு மதிப்புக் கொடுத்து கைத்தறி கலையை வளர்க்கும் வண்ணம் இந்த தினத்திற்கான வாழ்த்துக்களை பகிரும் பாலிவுட் கதாநாயகி சோனம் கபூரும் புடவையில் புதிதான மாற்றத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *