வின்வெளியில் மர்மான ரேடியோ சிக்னல்…! வேற்று கிரக வாசிகளா..?
விண்வெளியில் வானொலி அலைகளை வெளியிடும் மாயப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது. அது குறித்து Nature எனும் பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டது.
சூரிய மண்டலம் இருக்கும் Milky Way Galaxy-இல் அந்தப் பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பொருள் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை ரேடியோ அலைகளை வெளியிடுவதாகவும், ஒவ்வொரு முறையும் அலைகள் 1 நிமிடம் வரை நீடிப்பதாகவும் கூறப்பட்டது.
2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொருள் 3 மாத காலமாக அலைகளை வெளியிட்டபோது முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. அது புதுவிதமான விண்வெளிப் பொருளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், பொருளுக்கும் வேற்றுலக மனிதர்களுக்கும் பூமிக்கும் தொடர்பில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.