தலைக்கறி குழம்பு
ஆட்டு இறைச்சி உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். ஆட்டு இறைச்சியை மட்டும் உண்பதைத் தவிர்த்து உறுப்பு இறைச்சியை சாப்பிடுவது மருத்துவ நன்மைகள் தரும். பச்சைக் காய்கறி, கீரை வகைகள் சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும். ஆட்டிறைச்சி, ஆட்டின் தலை முதல் இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தரக்கூடியது.
- ஆட்டின் தலை சாப்பிடுவதால் மனிதனின் இதயம் சார்ந்த கோளாறுகள் நீங்குகின்றன.
- ஆட்டின் தலை முதல் இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தரக்கூடியது.
- மனிதனின் இதயம், மூளை, குடல், எலும்பு என அனைத்து பகுதிகளுக்கும் நன்மையை அளிக்க கூடியவை.
மனிதனின் இதயம், மூளை, குடல், எலும்பு என அனைத்து பகுதிகளுக்கும் நன்மையை அளிக்க கூடியவை. ஆட்டின் தலை சாப்பிடுவதால் மனிதனின் இதயம் சார்ந்த கோளாறுகள் வலிகளும் நீங்குகின்றன. உடலை வலிமையாக்க உதவுகிறது. தலைப்பகுதி எலும்பினை வலுப்படுத்துகிறது.
தலைக்கறி குழம்பு
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த ஆட்டுத்தலை 1, மல்லிவிதை 2 ஸ்பூன், அரை மூடி தேங்காய் துருவல், வெங்காயம் 10, நல்லெண்ணெய் 50 மில்லி, வற்றல் 10, சீரகம் இரண்டு ஸ்பூன், உப்பு , மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப.
செய்முறை விளக்கம்
தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும். சீரகம், மல்லியை அரைத்து வைக்கவும். கறியை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் அரிந்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். அரைத்த சீரகம், வற்றல், மல்லியையும் சேர்த்து வதக்கவும். ஆட்டுத்தலை கறியை போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் போட்டு, தேங்காய் பால் ஊற்றி வேக விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு முதல் ஒரு மாதத்தில் இந்தக் குழம்பை செய்து கொடுக்க குழந்தைக்கு தலை சீக்கிரமாக நிற்கும் என்பார்கள்.