ரத்தம் பொரியல்
அசைவ உணவு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் ஆரோக்கியமானது மட்டன். ஆட்டு ரத்தம், ஆட்டு ஈரல், ஆட்டிறைச்சி என்று அனைத்தும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மட்டன் சாப்பிடுவதை போன்றே அதன் உறுப்புக்களை சாப்பிடும் போது இன்னும் அதன் சத்துக்கள் அதிகமாக கிடைக்கின்றன.
- அசைவ உணவு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் ஆரோக்கியமானது மட்டன்.
- ஆட்டு ரத்தம், ஆட்டு ஈரல், ஆட்டிறைச்சி என்று அனைத்தும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
சோடியம், ஒமேகா-3, போலிக் ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த இறைச்சியில் பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீஸ், இரும்பு சத்து, கால்சியம், விட்டமின் கே, ஈ, பி1, பி2, பி3, பி9, பி12 போன்ற சத்துக்களும் உள்ளன. நல்ல கொழுப்புகள், அமினோ அமிலங்கள், புரோட்டீன், கனிமச் சத்துக்கள் என அனைத்தும் அடங்கி உள்ளன.
ரத்தம் பொரியல்
தேவையான பொருட்கள்
ஆட்டின் ரத்தம் 200 கிராம், எண்ணெய் 2 ஸ்பூன், பச்சை மிளகாய் 6, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், மிளகுத்தூள், நல்லெண்ணெய், தேங்காய் துருவல் அரை மூடி, வெங்காயம் 100 கிராம், கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லி தேவைக்கு ஏற்ப.
செய்முறை விளக்கம்
ரத்தம் உறைந்து இருக்கும். இதில் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். பிசைந்தாலும் உருண்டை துண்டுகளாக இருக்கும். தண்ணீரை இறுத்து விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு நன்றாக வதங்க விடவும். ரத்தத்தை சேர்த்து, மஞ்சள் தூள், சிறிது உப்பு, சேர்த்து கிளற வேண்டும். ரத்தம் சீக்கிரம் வெந்து விடும். மிளகுத்தூள் சேர்த்து நிறம் மாறியதும் கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். இரத்தம் நிறம் மாறி உளுந்தம் சுண்டல் கலரில் வரும். இட்லி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தனியாகவும் சாப்பிடலாம்.