சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்

முத்தழகை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பூமி… ஆத்திரத்தில் அஞ்சலி

நமது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியல் கிராமத்து அழகையும் விவசாயத்தின் பெருமையையும் உணர்த்தும் ஒரு சீரியலாக உள்ளது. ஒரு கிராமத்தில் விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அந்த சீரியலின் ஹீரோயினி முத்தழகு அழகாக நடித்த காட்டி இருப்பார்.

இந்நிலையில் முத்தழகுவிற்கும் நாடகத்தின் நாயகனான பூமிக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பேச்சியம்மாவின் கட்டளையால் திருமணம் நடைபெறும் ஆனால் பூமி ஏற்கனவே அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து உள்ளார் இந்நிலையில் இப்போது அஞ்சலையும் தான் முதல் மனைவி என்று கூறி வீட்டில் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டுள்ளார்.முத்தழகருக்கு போட்டியாக பல விஷயங்களை செய்து வருகிறார் அஞ்சலியா அல்லது முத்தழகா யாரை தனது மனைவியாக பூமி ஏற்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்

மேலும் படிக்க : ஆதிகுணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் அப்பத்தா எதிர்நீச்சல்

ஒரு பரபரப்பான சூழ்நிலையும் வீட்டில் இரு மனைவிகள் இருந்தால் என்னென்ன நடக்கும் என்பதை எதார்த்தமாக எடுத்துக்காட்டியும் முத்தழகு சீரியல் தற்போது முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் முத்தழகு மற்றும் பூமிக்காக பூமியின் கம்பெனியிலிருந்து ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருந்தனர் ஆனால் அஞ்சலி ஒரு பார்ட்டிக்காக பூமியை கூப்பிடுகிறார் பூமியும் எனக்கு காய்ச்சல் என்று சொல்லிவிட்டு எஸ்கேப்பாகி முத்தழகு உடன் பார்ட்டிக்கு செல்கிறார் ஆனால் பூமியின் நேரமோ என்னமோ தெரியவில்லை அஞ்சலியும் அதே பாட்டுக்கு வந்துள்ளார் இதை கவனிக்காத முத்தழகு மற்றும் பூமி இருவரும் ரொமான்டிக்காக டான்ஸ் ஆடி ஒருவருக்கொருவர் மாலை மாற்றும் காட்சியும் அதனைப் பார்த்து அஞ்சலி பாத்திரப்படுவதையும் தான் ப்ரோமோவாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது அடுத்து என்ன நடக்கப்போகிறது பூமி படும் பாடு என்னவென்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *