சுற்றுலா

சென்னையில் பார்த்து பெருமிதப்படுத்தப்படும் பகுதிகளின் பாகம் 2!

சென்னையில் உள்ள அருங்காட்சியகங்கள் :

காட்சி மனித வாழ்கையை வாழ்க்கையாய் மாற்றின கடவுளின் பிரம்மிக்கவைக்கும் முயற்சி. அத்தகைய அருமையான காட்சிகளை என் தலைமுறை பார்த்து ரசிக்கும் முயற்சி எங்கள் சிங்கார சென்னையில் வரும் வரிகளில வாழ்ந்து போன தலைவர்களுக்கு தலைநகரத்தில் அமைந்த சிறப்பிடங்கள், கலை பொருட்களின் இருப்பிடம் அனைத்தும் பார்க்கலாம். 

அரசு அருங்காட்சியகம் :  

1789ம் ஆண்டுக்கு முன் நம் ஒற்றுமையை சோதித்து அதை கண்டு வியந்து சென்ற பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட இடம் தான் இன்று நம் நினைவுகளை தூண்டும் அருங்காட்சியகமாகவும், அறிவை அதிகப்படுத்தும் கன்னிமரா பொது நூலகமாகவும், தேசிய பொருட்காட்சி சாலையாகவும் விளங்குகின்றது. பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட இந்த இடம் முன்பு பாந்தியன் வளாகம் என்று அழைக்கப்பட்டது. வரலாற்றுக்கால கலைப் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதே வளாகத்தில் சென்னையில் உள்ள மிக முக்கிய சிறுவர் அரசு அருங்காட்சியகமும் அமையப் பெற்றுள்ளது.

பார்வை நேரம் : காலை 9 30 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளிக்கிழமை விடுமுறை.

அமைவிடம் : 486,பாந்தியன் சாலை, சென்னை -600008

கோட்டை அருங்காட்சியகம் :

தலைமைச் செயலத்திற்கு வடக்கே ஒரு காலத்தில் அதிகாரிகளின் உணவிடமாக இருந்த இடம், இன்று கோட்டை அருங்காட்சியகமாகப் காட்சியளிக்கின்றது. பிறகு அங்கு மெட்ராஸ் பேங்க் என்ற பெயரில் ஒரு வங்கி உருவாகி, பாம்பே மற்றும் பேங்கக்காக உருமாறி, கடைசியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவாக இன்று இயங்கி வருகிறது. அதன் படிக்கட்டுகள் அடுத்த நீண்ட அறை பொதுமக்கள் பணம் மற்றும் இடமாக இருந்தது. 1796ம் ஆண்டு அது திறக்கப்பட்டது. அரிய கையெழுத்து ஆவணங்களும், பிற ஆவணங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

பார்வை நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

விடுமுறை : ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.

அமைவிடம் : காமராசர் சாலை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை 600009.

தேசிய கலைப் பொருட்காட்சியகம் :  

செம்மை மிக்க செம்மண் கற்களால் கட்டப்பட்ட இக்கட்டிடம் இந்திய முகலாயக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கலைநயம் மிக்க கலைப் பொருட்கள், செதுக்கப்பட்ட ஓவியக் கலைகள், 16-18ம் நூற்றாண்டின் முகலாயர் கால ஓவியங்கள், 17ம் நூற்றாண்டின் வெண்கலப் பொருட்கள் போன்ற கலைப்புதையல்கள் இங்குக் காட்சி தந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாற்றுடன், 10-13ம் நூற்றாண்டின் கைவினைக் கலைப்பொருட்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.

பார்வை நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

விடுமுறை : வெள்ளிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள்.

அமைவிடம் : 486,பாந்தியன் சாலை, சென்னை 600008.

சென்னையில் உள்ள நினைவு சின்னங்கள்

தலைவர் காமராஜர் நினைவு இல்லம்: 

கருப்பு காந்தி, படிக்காது படிக்கவைத்த மேதாவி  சிறந்த தலைவருக்கான பெயர் காமராஜர். தமிழகத்தில் திரு.காமராஜர் அவர்களின் ஆட்சிக் காலம் தமிழர்களின் பொற்காலம் என்று கூறலாம். தொழில் துறையில் தமிழகத்தை முன்னுக்கு கொண்டு வந்தது காமராஜரையே சாரும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற அவ்வையின் வாய்மொழி தமிழகத்திலேயே ஆவடி, அம்பத்தூர், கிண்டி, திருச்சி, திருவெறும்பூர், போன்ற பல இடங்களில் தொழிற்சாலைகளை உருவாக்கி தொழில் துறையில் தமிழகத்தை வளப்படுத்தியவர். இவர் 13.04.1954 முதல் 1.10.1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜர் இந்திய அரசியலில் மேக்கர் என்று அழைக்கப்பட்டார். அத்தகைய கல்வி திறந்த காமராஜரின் நினைவகம் தான் இங்கு அமைந்துள்ளது.

பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை.

அமைவிடம்: திருமலைப்பிள்ளை சாலை சென்னை 600017.

காந்தி மண்டபம்:

குஜராத்தில் உதித்த சூரியனாம் என் தமிழகத்தை காக்க வந்த தந்தையாம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை என்ற தத்துவத்தை செய்து காட்டி அதில் வாழ்ந்த ஞானியாம், அவரின் நினைவிடம் இதோ இன்றைய இயந்திர இந்திய தலைமுறைக்காக, காந்தி தென்னாப்பிரிக்காவில் வழக்குறைஞராக பணிபுரிந்தபோது ரயிலில் ஏற்பட்ட அவமானத்தால் வெகுண்டெழுந்தார் மகாத்மா காந்தி, விழுந்த இடத்திலேயே போராட்டத்தை ஆரம்பித்து அதில் வெற்றி கண்டார். பிறகு இந்தியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தை நடத்தி இந்தியாவிற்கு விடுதலை வாங்கித்தந்தார் அத்தகைய மகானின் நினைவாக ஏற்படுத்தப் பட்டதே இந்த காந்திமண்டபம். மேலும் இதன் அருகில் திரு ராஜாஜி மற்றும் காமராஜர் நினைவகங்கள் அமைந்துள்ளன. இந்த நினைவகங்கள் ராஜ்பவன் (கவர்னர் மாளிகை) அருகில் அமைந்துள்ளது.

பார்வை நேரம்: காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை.

அம்பேத்கர் மணிமண்டபம்: 

இந்திய அரசியல் சட்ட திட்டத்தை வகுத்து ஒழுக்கம் மற்ற மனிதனை சட்டத்தின் வழி ஒழுக்கமாகிய சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் நினைவு மண்டபம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. பீமாராவ் என்ற இயற்பெயர் கொண்ட, லண்டனில் பட்டம் பெற்ற மேதை. சிறந்த வழக்கறிஞராக விளங்கியவர் மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் சேவை செய்தவர். சுதந்திர தொழிலாளர் கட்சி என்ற கட்சியைத் மராட்டியத்தில் தொடங்கியவர். இவரது மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது, இவர் பெயர் கொண்ட மணிமண்டபம் கிரீன்வேஸ் சாலை சென்னை 28ல் அமைத்துள்ளது.

எம்ஜிஆர் நினைவகம்: 

மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சி செம்மல் எம் ஜி ஆர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அழைக்கப்படுகின்ற எம் ஜி ராமச்சந்திரன் மருதூர் கோபாலமேனன் சத்யா தம்பதியரின் புதல்வராகப் பிறந்தார். சதிலீலாவதி என்ற இப்படத்தின் மூலம் அறிமுகமாகி துறையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி திராவிட இயக்க அரசியலை உருவாக்கி தமிழகத்தின் ஒப்பற்ற முதல் அமைச்சரானார். அவரது நினைவாக சென்னை மெரினா சாலையில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வருவோருக்கு இந்த இடம் ஒரு அரிய நினைவு பொக்கிஷமாக விளங்குகிறது.

தந்தை பெரியார் நினைவகம்

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சம உரிமை பெறுவதற்காக போராடி வெற்றி பெற்றவர் பெண்விடுதலை, குழந்தைத் திருமணம், வேசித்தனம் ஆகியவற்றை ஒழித்தவர் திருமணத்தை முதலில் கொண்டு வந்தவர் மேலும் இந்திய விடுதலைப் போராட்டங்களை தமிழகத்தில் வழிநடத்திச் சென்றவர் தந்தை பெரியார். மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் ஆகியோரால் வைக்கம் வீரர் என்று பாராட்டை பெற்றவர். இவர் ஒரு சமூகப் புரட்சியாளர் பாகு கட்டப்பட்ட நினைவுச் சின்னம் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ளது.

பார்வை நேரம்: காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *