திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் சாமி தரிசனம் செய்த இளையராஜா
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் நேரலையில் தொலைக்காட்சி மூலமாக கண்டனர். கோயிலின் 2,668 அடி, உயர மலை உச்சியில் 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் காடா துணியை பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டன.
- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.
- கோவிலுக்குள் பக்தர்கள் வரவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளன.
- திருவண்ணாமலை தீப தரிசனத்திற்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
பக்தர்கள் வரவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆண்டு தோறும் இந்த நிகழ்வை காண பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.
தற்போது தொற்றின் காரணமாக பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுத்ததால் கோவிலுக்குள் பக்தர்கள் வரவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளன.
இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்
திருவண்ணாமலை தீப தரிசனத்திற்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். கிரிவலம் சாலையில் இருக்கும் ரமன ஆசிரமத்திலும் வழிபாடு செய்தார். இளையராஜாவை சந்தித்த பக்தர்கள், காவலர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.