சினிமா

முருங்கைக்காய் சிப்ஸ் ஆ! நல்லா இருக்கே

சாந்தனு_பாக்யராஜ்

முருங்கைக்காய் சிப்ஸ் பேரே ரொம்ப அசத்தலா இருக்குல. முருங்கைக்காய்னு சொன்ன உடனேயே உங்க எல்லாருக்கும் பாக்யராஜ் நினைப்பு வந்து இருக்கும்னு நினைக்கிறேன். வரலனா தாங்க தப்பு. அப்பாவோட வழிய ஃபாலோ பண்றாரு அவரோட பையன்.

முருங்கைக்காய் சிப்ஸ்

பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ் என இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். சாந்தனு பாக்யராஜ் அதுல்யா ரவி கதாநாயகன் கதாநாயகியா பேர் பண்ற இந்த படத்த ஸ்ரீஜர் இயக்குகிறார். தரன் குமார் இசை அமைச்சு இருக்க இந்த படத்துல யோகி பாபு மனோபாலா மதுமிதா மற்றும் ரேஷ்மா பசுப்புலேதி துணை கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க.

முருங்கைக்காய் சிப்ஸ் சுவையா குறும்புத்தனத்தோட குடும்ப படமா சித்தரிக்கப்பட்டு இருக்கு. இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர இந்த மாதம் வெளியிட்டு இருக்காங்க. அந்த போஸ்டர்லையே பல விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். ‘தந்தையின் பெயரைக் காப்பாற்றும் மகனாக வளர்கிறார் சாந்தனு பாக்யராஜ்’ அப்படின்னு சொன்னா மிகையாகாது.

சமூக வலைத்தளம்

கௌதம் வாசுதேவ் மேனனோட இயக்கத்துல ஒரு பாடல் குறும்படம் யூடியூப்ல வெளிவந்து செம வைரலா இருந்துது. ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு வெளிவந்த இசை குறும்படம் சாந்தனு பாக்யராஜோட நடன திறமையை எக்ஸ்ட்ராடினரியா அருமையா வெளியிட்டு இருக்காரு.

சாந்தனு பாக்யராஜ் தன்னோட மனைவியான கிகியோட இணைந்து இந்த கொரோனா சமயத்துல ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்காங்க. ‘வித் லவ் சாதனு கிகி’ எனப் பெயரிட்டு அந்த யூடியூப் சேனல்ல ‘நீ பாதி நான் பாதி’ புதுசா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்காங்க. இன்ஸ்டாகிராம் மூலமா அந்த யூடியூப் சேனலுக்கு விளம்பரமும் பண்றாங்க.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ல வீடியோவ அடிக்கடி ரிலீஸ் பண்றாரு சாந்தனு பாக்யராஜ். அடி செம தூளா டான்ஸ் ஆடறாருபா. சில காணொளிகள்ல இவங்க மனைவி கிகியோடையும் பட்டைய கிளப்புறாரு.

இப்படி ஊரே இணையதளத்தில தான் வாழ வேண்டிய நிலைமைக்கு இந்த கொரோனா நம்மள தள்ளிடிச்சே! சரி விடுங்க நம்ம முருங்கைக்காய் சிப்சுக்கு வெயிட் பண்ணுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *