ஐஸ்வர்யாராய் நயன்தாரா ஸ்ரேயா என அசத்தும் மலேசியா மேக்கப் ஆர்டிஸ்ட்
மலேசியாவைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் கண்ணன் ராஜமாணிக்கம் பெண் மாடல் ஒருவருக்கு மேக்கப் செய்து அச்சு அசலாக நயன்தாரா, ஐஸ்வர்யாராய், ஸ்ரேயா போல் மாற்றியுள்ளார்.
இதை காணும் போது அசல் யார் நகல் யார் என்பது போல் குழப்பம் ஏற்படும் அளவிற்கு மேக்கப்பில் அசத்தியுள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் புதுமையாக ஏதாவது செய்யலாம் என்ற முயற்சியின் வெளியீடு தான் இது என்று அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் தளபதி விஜயின் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த ஷ்ரேயாவை போல் மாடலுக்கு மேக்கப் செய்து புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.
அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பின் அடுத்த அடுத்ததாக முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடித்த நயன்தாராவின் மேக்கப்பையும் முயற்சி செய்து அது அச்சு அசலாக அப்படியே இருக்க.
ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதிலும் ஒருபடி மேல் சென்று காஷ்மோரா படத்தில் நயன்தாரா மேக்கப்பை ரீ கிரியேட் செய்து அப்லோட் செய்துள்ளார்.