தல தோனியின் ஓய்வு குறித்து வாழ்த்துக்களை பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளனர்
சக போட்டியாளராக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தவர் மகேந்திர சிங் தோனி. தல தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்ட் 15 தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. ஓய்வு பெறுவதாக அறிவித்ததில் இருந்து இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறார் தோனி. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு துறையினர், அரசியல் பிரபலங்கள் ட்வீட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் அஸ்வின் போன்றவர்களும் ட்வீட் செய்துள்ளனர்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தோனி ஓய்வு குறித்து வெளியிட்ட செய்தியில் இது அவரின் சகாப்தத்தின் முடிவு. நாட்டிற்கும், கிரிக்கெட் உலகத்தில் சிறந்த வீரர் தோனி. இவருடைய தலைமை பண்புகள் யாருக்கும் வராது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இவரது ஆரம்பக்காலத்தில் வெளிப்படுத்திய பேட்டிங் திறமைகள் இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அனைத்து நல்ல விஷயங்களுக்கு ஒரு முடிவு வரும். களத்தில் விளையாடி முடிக்கும் போது இறுதியில் எந்த வருத்தமும் இல்லாமல் வெளியேறுவார். எந்த வருத்தமும் இல்லாமல் முடிப்பார். வாழ்க்கையில் சிறந்த நடக்க வேண்டும் என்று வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் சிறந்த கேப்டன்களில் நீங்களும் ஒருவர். உங்களுடன் நேரம் செலவிட்டது எனக்கு பெருமை என்று தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
விளையாட்டு வீரர்கள் பலரும் இருந்தாலும் தோனி போன்ற ஒரு அமைதியான வீரரை பார்க்க முடியாது கிரிக்கெட் பிரியர்களுக்கு தோனி அவர்களது குடும்பத்தில் ஒருவர் என விரேந்தர் சேவாக் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் தல தோனிக்கு அனைவரது மனதில் இருந்து ஓய்வு கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மாபெரும் மனிதர் ஓய்வுபெற்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி டோனி ஓய்வு பெற்றது வருத்தத்தைத் ஏற்படுத்தியதாகவும், சிறந்த பேட்ஸ்மேன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவர் ஒரு சகாப்தத்தை படைத்தார் என்று ட்வீட் செய்தார்.