விளையாட்டு

ஹாப்பி பர்த்டே ரியல் கிங் தோனி!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோனி. 2011 அந்த மைதானத்தின் தலைவனாக பலர் இருந்திருக்கின்றனர். ஆனால் அன்று தான் புதிய நாயகனாக உருவாக இருக்கும் நமது தோனி ஐசிசி உலக கோப்பை இறுதிப்போட்டியில் மெகா சாதனை படைத்தார்.

இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் உலக கோப்பையை வென்ற தருணம் இன்று வரை மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது.

அசாதாரணமான சூழலில் சமமான மனநிலையிலிருந்து கட்டுக்குள் அணியை வழிநடத்தி வெற்றியைப் பெற்றது. இன்று வரை எது இமாலய சாதனையாக கருதப்படுகிறது.

ஜூலை 7 இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் அவரை பலர் வாழ்த்திய வண்ணம் உள்ளனர். தோனி கான #ஹேஸ்டேக்குகள் பறக்கின்றன.

1981 ஜூலை 7 ராஞ்சியில் பிறந்தார். நமது கிரிக்கெட் கேப்டன் தோனி அவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட முன்பு ஒரு விக்கெட் கீப்பராக தனது விளையாட்டை ஆரம்பித்தார்.

பள்ளியில் விளையாடினேன். ஹெலிகாப்டர் ஷாட் அனைவரையும் கட்டி ஆழ்ந்தார் தோனி. பீகார் ஜார்கண்ட் கிழக்கு மண்டலம் ஆகிய பகுதிகளில் எல்லாம் விளையாடி பெயர் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

2000ம் ஆண்டில்தான் அவருடைய கிரிக்கெட் வாழ்வு தொடங்கியது என்று கூறலாம். இந்திய அணியின் முதல் சர்வதேச அளவிலான ஸ்கூல் கேப்டனாக இவர் சிறந்து விளங்கி இருக்கின்றனர்.

இவரை அடையாளம் கண்டுபிடித்து இவருக்கு பல வாய்ப்புகள் கங்குலி கொடுத்தார் என்பது ஒருபட தக்கதாகும். 2005 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி அடித்த 148 ரன்கள் இந்திய மக்களைத் அணி பக்கம் திருப்புவது என்று கூறலாம்.

அன்று முதல் இன்று வரை தோனி அசைக்க முடியாத சேம்பியன் தலைவராக அனைவரது இதயத்தையும் ஆளுகிறார். 2013 ஐசிசி சாம்பியன் கோப்பை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.

2007ஆம் ஆண்டு டி20 மற்றும் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வென்றது. 2010, 2011, 2018 மூன்று ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

இதன் தலைவராக இருந்து தோனி மாபெரும் பங்காற்றினார் என்று குறிப்பிடப்படுகின்றது. தோனி இவ்வளவு உயர்ந்த ஒரு சாதாரண மனிதர் போல இறங்கி விளையாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

அத்துடன் அன்று முதல் இன்று வரை அவர் சிறந்த ஞானத்துடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பல தொடர்களில் ரத்தாகி உள்ளது. இதனால் இந்த ஆண்டு தோனி ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. நம்ம தல தோனிக்கு எப்பவுமே சலாம் போட்டு வாழ்த்துவோம் அவரை. ஹாப்பி பர்த்டே தோனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *