ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ஊக்குவிப்பவனும் தேக்கு விற்பான்
பிறரை ஊக்கப்படுத்துவது அவ்வளவு எளிதா…! நம்மால் கூட இதெல்லாம் முடியுமா என்ன?
எல்லோருக்குமே ஓரளவிற்கு திறமை இருக்கத்தான் செய்கிறது. சிலர் அவர்களின் திறமையை மிக இயல்பாக வெளிப்படுத்துகின்றனர். அவர்களுக்கு அந்த சந்தர்பம் கிடைக்கிறது. நம்மில் பலருக்கு அப்படி இயல்பாக வெளிப்படுத்த முடிவதில்லை ஏனோ ஒரு தயக்கம.
திறமைக்கு சந்தர்பம்:
அப்படியே நாம் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்த மாற்றுவதிலும் சந்தர்ப்பங்கள் எதுவாக வாய்ப்பதில்லை ஆனால் வாழ்வின் எதுவுமே தானாக அமைந்து விடாது அப்படி அமைந்துவிட்டால் அப்புறம் சுவாரசியமாக ஒன்றுமே இருக்காது.
ஆனால் அப்படி ஆரம்ப நிலையில் முயற்சி செய்பவர்களை நம்மால் மிக எளிதில் பாராட்டி அவர்களை தன்னம்பிக்கை அடைய வைக்க முடியும்.
உதாரணத்திற்கு நமது தெருவிலேயே ஒருவர் புதிதாக கவிதை எழுத முயற்சிக்கிறார் என்றால், அந்த கவிதையை படித்துப் பார்த்துவிட்டு என்ன ஒரு கலவையான கவிதை என்று கூறலாம். அது நன்றாகவே இருந்தாலும் பரவாயில்ல நல்லா எழுத இன்னும் நல்லா எழுதி பாரு என்றும் கூறலாம். இரண்டுமே ஒரே விதமான ஒரு விஷயத்தைத்தான் கூறுகிறது ஆனால் முதலில் கூறுவது நகைச்சுவையாக இருந்தாலும் அது எதிர்மறையான எண்ணத்தை விதைக்கிறது.
இரண்டாவதாக கூறுவது நேர்மறையான எண்ணத்தை விதைக்கிறது.
ஒரு சின்னப்பாராட்டு:
ஒவ்வொரு மனசு மே ஒரு சின்ன பாராட்டுக்கு தான் இயங்கி கடைக்கு அப்படின்னு நம்ம தமிழ் சினிமால ஒரு வசனம் வருகிறது இல்லையா. அது ஏன் சார் நமக்கெல்லாம் புரியமாட்டிங்க்குது
அந்த வசனம் அப்படியே நூற்றுக்கு நூறு உண்மை நாம எல்லாவற்றையுமே இப்போது பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நம்மை யாராவது பாராட்ட மாட்டார்களா என்பதற்காகவே தேடித்தேடி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பது, ஃபேஸ்புக்கில் ஸ்டோரி போடுவது, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது என்று நமது மனதின் ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இவை எல்லாமுமே அது நல்லதுதான்.
சரி நமக்கு தான் பாராட்டு கிடைக்கவில்லை ஆனால் நாம் மற்றவரை ஏன் பாராட்டக் கூடாது அப்படி என்கிற எண்ணம் நம்மில் யாருக்கும் வருவதில்லை.
நம்மள யாரும் பாராட்டுவது கிடையாது நாம மட்டும் ஏன் வலியப்போய் பாராட்டணும் அப்படியெல்லாம் எந்த ஒரு ஈகோவும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மனம் ஒரு குழந்தை மாதிரி அதற்கு நாம் என்ன விதமான மேக்கப் போட்டாலும் ஒருநாள் அது தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி விடும்.
பாராட்டுக்கள் நல்ல துவக்கம்:
நம்மில் அனைவரும் இயல்பாகவே மிக மிக நல்லவர்கள் நாம்தான் வேண்டும் என்றே குரூர மாணவர்களாக காரர்களாக திறமை படைத்தவர்களாக காட்டிக்கொண்டிருக்கிறோம். அது துளியும் உண்மை கிடையாது நாம் அப்படி நடந்து கொள்ளும் போது நம் மனசாட்சியை நம்மிடம் கேள்வி கேட்கிறது இல்லையா அப்படி என்றால் நாம் சமூகத்தில் இன்னும் நல்லவர்களாக தான் இருக்கிறோம் என்று அர்த்தம்.
மருந்து:
பாராட்டு என்பது ஒரு மிகப்பெரிய ஊக்கமருந்து. அது எல்லோராலும் எல்லோருக்கும் கொடுத்து விட முடியாது. அப்படி செய்வதற்கு ஒரு பெரிய மனது வேண்டும். உதாரணமாக உங்களுக்கு தெரிந்த நன்றாக பாடுகிறார் என்றால் அவர்களை மனம் விட்டுப் பாராட்டுங்கள் முடிந்தால் இதமாக இப்படி செய்யலாம் எப்படி செய்யலாம் என்று கூறிப் பாருங்கள் உங்களுக்கு அவர் தரும் மதிப்பே தனியாக இருக்கும்.
அவர் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் நேரடியாக அவரிடம் கூறிய விஷயத்திலேயே உங்களுக்கு ஏற்படும் சந்தோஷமே வேறு மாதிரியாக இருக்கும். அதை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்.
புதிய முயற்சிக்கு பாராட்டு:
நண்பர்கள் யாராவது புதிதாக கதையோ கட்டுரையோ எழுதும் முயற்சி செய்கிறார்களோ அந்த பக்கத்தை உங்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள் படித்துப் பார்த்து உங்களுக்கு மனதில் தோன்றிய நேர்மறையான எண்ணத்தை பதிவிடுங்கள். தவறு ஏதாவது இருந்தால் அவர்களை தொடர்புகொண்டு கூறுங்கள் கூட்டத்தில் நீங்கள் ஒருவரை திக்கிப் பதிவு செய்தால் அதைப் பின்தொடர்ந்து பலர் அவரை வார்த்தைகள் சாட நேரும்.
எனவே ஆரம்பத்திய நிலையில் இருப்பவர்களை சற்று இதமாக தேற்றி , பிறகு நன்றாக எழுத ஆரம்பித்தவுடன் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம்.
ஏனென்றால் ஒருவர் நன்றாக ஒரு விஷயத்தை செய்ய தொடங்கிவிட்டார் என்றால் பல விமர்சனங்களை கடந்து விட்டார் என்று தானே அர்த்தம்.
இந்த சக மனிதரை தேற்றும் குணம் இருக்கிறது அது மிகப்பெரிய விஷயம். நம்மை யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் நமக்கு என்ன? பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பது இருக்கிறதே … அது ஒரு மிகப்பெரிய சேவை!!
அதை நாம் இன்று முதல் செய்யத் துவங்குவோமா நண்பர்களே?