நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.. மாஸ்க் அணியாமல் நடமாடும் மக்கள்!
மக்களின் நடமாட்டம் அதிகரிக்க அதிகரிக்க கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இந்திய அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநகரங்களில் சென்னையும் ஒன்று. நாடு முழுவதும் மாதந்தோறும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நோய்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மாஸ்க் அணியாமல் பலரும் வெளியே நடமாடுவதை பார்க்கும் போது கொரோனா பயம் குறைந்து விட்டதாக தெரிகின்றன. பொது வெளியில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அடிப்படை விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று அரசாங்கமும், மருத்துவர்களும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மாஸ்க் அணியாதவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறைந்தது 500 பேர் மாஸ்க் அணியாமல் ஒரே நாளில் வெளியே செல்வதாக கூறப்பட்டுள்ளன. இந்தக் குற்றத்திற்காக அபராதம் செலுத்துகிறார்கள். 90% பேர் வெளியே வரும் போது மாஸ் அணிவதில்லை. வாகனங்களை ஓட்டும் போது கூட மாஸ்க் அணிய வேண்டும் என்பதை கடுமையாக கவனித்து வருகின்றனர்.
காவல்துறையினர் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கப்படுவது குறித்து காவலர்கள் உறுதி செய்து வருகின்றனர். விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிக இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் காவலர்கள் உறுதி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி அளித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.