கொட்டும் வெயிலில் போலீசார் பேரணி
பெண் காவலர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு நடத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வடலூர் கெங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி அணிவகுப்பு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க முழு பாதுகாப்பு அளிப்போம் என்றும்,பொதுமக்கள் தேர்தலில் எவ்வித அச்சமின்றியும் வாக்களிக்க வேண்டும் தேர்தல் மற்றும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளிகளை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும் என்றும் மைக் மூலம் பேசி குறிஞ்சிப்பாடி விழப்பள்ளத்தில் தொடங்கி பெருமாள் கோயில் காந்தி சிலை எல்லைக்கள் கடைவீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையம் வீதிகளின் வழியாக நடந்து சென்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி வடலூர் நெய்வேலி குள்ளஞ்சாவடி உள்ளிட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் உள்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.