ஆன்மிகம்செய்திகள்

நாளை செவ்வாய் வளம் தரும் சங்கடஹர சதுர்த்தி

நாளை செவ்வாய் கிழமை சங்கடகர சதுர்த்தி சிறப்பான நாள் அனைவரும் விரதமிருந்து இந்த நாளை வணங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் சங்கடகரசதுர்த்தி அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நமது வாழ்வின் வேண்டியது அனைத்தும் கிடைக்கப்பெறலாம்.

வினைத் தீருக்கும் விநாயகர் அருள் பெற சங்கடகர சதுர்த்தி வணங்கி வருவது சிறப்பு தரும். சங்கடகரசதுர்த்தி நாளை நாள் முழுவதும் விரதம் இருந்து காலையும், மாலையும் கணபதிக்கு பூஜை செய்து அடுத்த நாள் மீண்டும் தீபம் காட்டி நமது விரதத்தை முடித்துக் கொள்வது சிறப்பானதாகும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று மஞ்சளில் கணபதி பிடித்து வணங்கலாம். அல்லது வீட்டில் உள்ள கணபதி சிலைகளுக்கு நீர் அல்லது பால் அபிஷேகம் செய்தும் வணங்கலாம். சதுர்த்தியன்று மாலை நேரம் பூஜை செய்தல் சிறப்பாகும், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கமாகும்.

ஊரடங்கு முடிந்து கோவில்கள் திறக்கப்படுவதால் இந்த சங்கடஹர சதுர்த்தி கோவிலுக்கு சென்று சமூக இடைவெளியுடன் இறைவனை வழிபடுதல் சிறப்பு தரும் மக்களே, சங்கடகரசதுர்த்தி நாளை ஸ்ரீகிருஷ்ணர், சந்திரன் மற்ற பல கடவுள்களும் பின்பற்றி வரங்களைப் பெற்றுள்ளனர் என்பது புராணங்கள் கூறுகின்றன.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் காலை எழுந்து குளித்து பூஜை அறையில் தூய்மை செய்து கணபதிக்கு மஞ்சள் திருநீறு குங்குமம் சாற்றி வணங்கலாம். இயன்றவர்கள் கணபதிக்கு அபிஷேகம் செய்யலாம். விநாயகருக்கு அருகம்புல் சாற்றுடன் எருக்க மாலை அணிவித்தல் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுதல் அல்லது நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவை சிறப்பு தரும். இந்த நன்னாளில் வேலை வேண்டுபவர்கள், திருமணம் நடக்க வேண்டும் என்பவர்கள் பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் ஆகியோர் சங்கடகரசதுர்த்தி நாளை பின்பற்றலாம் முடிந்தவரை இந்நாளில் விரதம் இருப்பது நல்ல பலன் தரும். சதுர்த்தி நாளில் நீர் மட்டும் அருந்தி வரலாம் கர்ப்பிணி பெண்கள் வயது வயது முதிர்ந்தோர் நோயாளிகள் போன்றோர் விரதம் இருப்பதை தவிர்க்கவேண்டும். இந்நன் நாளில் விநாயகருக்குரிய மந்திரங்கள் ஜபித்து அவருக்கு தீப தூபம் காட்டி மனமுருகி வேண்ட வேண்டியது கைகூடும் வீட்டில் உள்ள சங்கடங்கள் விலகும். வளமான வாழ்விற்கு தேவையான அனைத்தும் பெறலாம். சங்கடஹர சதுர்த்தி அன்று கணபதிக்கு சித்ரா அண்ணா, கொழுக்கட்டை மற்றும் பொங்கல் ஆகியவை நெய்வேத்தியம் கொடுத்து வணங்கலாம் இது சிறப்பு தரும்.

ஊரடங்கு தளர்வையொட்டி தொடங்கும் இந்த நன்னாளில் மக்கள் வீடுகளில் அல்லது கோவில்களில் பூஜை செய்து நமக்கு ஏற்பட்டுள்ள பல இன்னல்கள் எதுவாகினும் விநாயகர் முன்பு வைத்து சங்கடங்களை போக்கி கொள்வோம் அருள் பெறுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *