மழைக்காலம் வருது பார்த்து பாதுகாப்பாக இருங்க-மோடி அறிவுரை!
மழைக்காலம் என்பதால் இந்த ஆண்டு மழை வெள்ளம் நாடு முழுவதும் அதிகரித்து காணப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவலாகப் பெய்வதால் நோய்த்தொற்றுகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஆரோக்கியம் என்பது அவசியமாகிறது என்பதை டிவிட்டர் பக்கத்தில் மோடி அவர்கள் தெரிவித்திருக்கின்றார். வெப்ப மண்டல நோய்கள் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவது எதிர்காலத்தில் இயல்பான ஒன்றாக இருக்கின்றது.
ஏற்கனவே நாட்டில் இருக்கும் இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மோடி அவர்கள் அறிவு அறிவுறுத்துகின்றார்.
அரசு நாடு முழுவதும் தனது கவனத்தை முழுமையாகச் செலுத்தி வருகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பணியை உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. மக்கள் தயாராகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியமாக இருக்கின்றது. நாடு முழுவதும் மழை பெய்வதால் மத்திய இந்தியா, ஒடிசா, கோவா, குஜராத், ராஜஸ்தான், அசாம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மழை வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது.
ஆகையால் இந்தப் பகுதியை அரசு முழுமையாகக் கண்காணித்து வருகின்றது அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவலாகப் பெய்துவரும். மழை குறித்த விவரங்களை அரசு முழுமையாகக் கண்காணித்து வருகின்றது. இதுகுறித்து உடனுக்குடனான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் மழைக்காலத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியம் தரும் உணவுகள் சாப்பிட வேண்டும் மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி நீர் தேங்கும் கொசு அதிகரிக்கும் இவற்றை அனைத்தும் தடுக்குமாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகின்றது. பார்த்து உஷாராக இருந்த மக்களையும் பிரதமர் அறிவுரையைக் கேட்டுக் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.