பருவமழை தீவிரமடைவதால் ஆந்திரா தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு!
பருவமழை தீவிரம் அடைந்ததால் இந்தியாவின் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதற்காக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் மத்திய மகாராஷ்டிரா அசாம் கொங்கன், கோவா ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது ஆகையால் இதனையொட்டி தெற்கு ஆந்திரப் பகுதி தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆந்திரா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகின்றது. இனிவரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி ஆனது காற்றழுத்த தாழ்வு பகுதி யாக உருமாறினார்.
இந்தியாவில் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா தமிழகத்தின் பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இன்றைய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கொரோனா காரணமாக நோய்தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. இந்நேரத்தில் மழை பெய்து வருகின்றது மழையால் மக்கள் வெளியில் நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளலாம். தொற்றுநோய்களைத் தடுக்கலாம் எனினும் வீட்டைச் சுற்றி நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் மழைக்கால தொற்று நோய்களையும் தவிர்க்க வேண்டுமென்றால் தூய்மை அவசியம் ஆகும்.
சுற்றுப்புறத் தூய்மை அவசியம் குப்பைகளை அதற்குரிய இடத்தில் கொட்டுவது நல்லது. துணிகளைத் துவைக்கும்போது பூஞ்சை ஆகியவை படாமலிருக்க பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் ஈரத்தன்மையை குறைத்துக் கொள்வது அவசியமாகின்றது. மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் பொது சுகாதாரம் என்பது அவசியமாகின்றது.