பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடக்கம்
கொரோனா ஊரடங்கு தளர்வை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுடன் இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கின்றது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் நோய் தொற்று பெருகிவரும் இந்த நிலையில் மத்தியில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தொடரில் 47 மசோதாக்கள் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அச்சுறுத்தல் சவாலான இந்தச் சூழ்நிலையில் அரசு செயல்பட வேண்டிய கட்டத்தில் பல்வேறு கேள்விகளை அரசு எதிர்கொள்ளும். மேலும் எல்லையில் சீனா இந்தியா பிரச்சனைகள், நாட்டிற்குள் இருக்கும் பொருளாதார சரிவுகள் ஆகிய பல்வேறு சவாலான கேள்விகளைப் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிப் பதிலளிக்க வேண்டும்.
இந்தநிலையில் மழைக்கால இன்று காலை கூட்டத்தொடர் 9:00 மணிக்குச் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கூடி இருக்கின்றது. பிரதமர் மோடி மற்றும் எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி அவரவர் இருக்கையில் அமர்ந்து இருக்கின்றனர். மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையும் நடைபெறும்.
நாளை முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை பிற்பகல் மூன்று மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். மக்களவை கூட்டம் முழு பாதுகாப்புடன் தூய்மை மற்றும் பாதுகாப்பு முறையுடன் பரிசோதனைகள் முழுவதுமாக நடத்தப்பட்டு எம்பிக்கள் பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் ஊடகவியலாளர்கள் எம்பிகள் ஆகிய அனைவருக்கும் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த அனைவரும் ஆப் மூலம் தங்களுடைய வருகையைப் பதிவு செய்திருக்கின்றனர்.
மக்களவையில் இன்று 257 உறுப்பினர்கள் பார்வையாளர்கள் இடத்தில் 172 உறுப்பினர்கள் அமர வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்ற. து மாநிலங்களவையில் 60 உறுப்பினர்கள் பார்வையாளர்கள் இடத்தில் 50 உறுப்பினர்கள் அமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேமராவின் மூலம் சபாநாயகரிடம் அனைவரும் பேசலாம். முழுமையான சமூக இடைவெளி பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது.
ஐந்து மாத இடைவெளிக்குப் பின்பு தொடங்கும் இந்தப் பாராளுமன்றத்தில் மொத்தம் 18 நாட்கள் கூட்டங்கள் நடைபெறும் 47 மசோதாக்கள் விவரிக்கப்படுகின்றது. இவற்றில் 2 நிதி மசோதாக்கள் இரண்டு பேசப்பட உள்ளன இந்தப் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆளும் கட்சி எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.ர் ஊடகங்களும் இதனை முழுமையாகத் தெரிவித்து வருகின்றன