பண மழை பொழிகிறது
திரு. மு. க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்த பின் தமிழக மக்களுக்கு பண மழை பொழிகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் என்பதை தொடர்ந்து மருத்துவ பணியாளர்களுக்கு பல ஊக்கத்தொகையை இன்று அறிவித்துள்ளார்.
மே 10 முதல் ஊரடங்கு இடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ரூபாய் 2000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். திங்கட்கிழமை தொடங்கிய இந்த பணி இன்றும் தொடர்கிறது.
மே 15 முதல் ரூபாய் 2000 விநியோகிக்கப்படுகிறது. மே 16 ஞாயிற்றுக்கிழமையாக இருக்க அன்றும் விடுமுறை இல்லாமல் ரேஷன் கடைகள் செயல்பட்டு ரூபாய் 2000 விநியோகிக்கப்படும் அதற்கான மாற்று விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.
மருத்துவத் துறையில் வேர்வை சிந்துவதோடு தன் உயிரையும் தியாகம் செய்து உழைக்கும் மரியாதைக்குரிய மருத்துவர்கள் ஊழியர்கள் என அனைவருக்கும் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் தமிழகத்தின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்.
மூன்று மாதங்களுக்கு அதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூபாய் 30,000, செவிலியர்களுக்கு ரூபாய் 20,000, இதர பணியாளர்களுக்கு ரூபாய் 20,000, பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு ரூபாய் 20,000 என்று ஊக்கத் தொகையை தெரிவித்துள்ளார்.
சர்வதேச செவிலியர் தினமான இன்று தமிழக முதலமைச்சரிடமிருந்து சிறந்த பரிசு.
மேலும் இந்த கடுமையான சூழலில் தன் குடும்பம் பாராது நேரம் பாராது சேவை செய்தது மட்டுமல்லாமல் தன் உயிரையும் இழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 43. அந்த மரியாதைக்குரிய 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒருவரின் இழப்பை பணம் ஈடுகட்டுமா என்பதை வார்த்தையால் கூற முடியாத விஷயமாக இருப்பினும் இந்த கடுமையான காலகட்டத்தில் பணத்தின் தேவை அதிகரித்து அன்றாட வாழ்க்கையை வாழ்வது கடினமாக இருக்கும் சூழ்நிலையில் உயிருள்ள மக்களுக்கு கிடைக்கும் இந்த தொகை மிகவும் அவசியம்.