Somavaara viratham : சோமவார விரத முறைகளும் , அதனால் கிடைக்கும் அற்புத பலன்களும்
சிவபெருமானை வேண்டி திங்கட்கிழமை அன்று சோமவார விரதம் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். பொதுவாக சோமவார விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிக விசேஷம் வாய்ந்த விரதம் ஆகும் மற்ற விரதங்களை காட்டிலும் சோமவார விரதத்திற்கு பலன் அதிகம்.

சோமவார விரதம்
சோமவார விரதம் திங்கட்கிழமை நாட்களில் சிவபெருமானை வழிபட்டு திங்கட்கிழமை சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது.
உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று விரும்பினால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு ஒருவேளை விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு வரலாம்
திங்கட்கிழமை நாட்கள் விரதம் இருக்க விரும்புபவர்கள் ஐந்து திங்கட்கிழமை மற்றும் 7 திங்கட்கிழமைகள் 9 திங்கட்கிழமைகள் இவ்வாறு பின்பற்றி வரலாம்.

21 திங்கட்கிழமை சிவபெருமானை வேண்டி வழிபட்டு வந்தால் நமக்கு நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் வாரி வழங்குவார் சிவபெருமான் என்பது ஐதீகம்.
சோம வார விரத முறை
பொதுவாக சோமவார விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சிவபெருமானுக்கு உரிய வில்வ இலை வைத்து பூஜை செய்து உங்கள் விரதத்தை தொடங்கலாம்.
சோமவார விரதம் இருப்பவர்கள் கட்டாயம் அன்றைய தினம் பெரியவர்கள் இடத்தில் ஆசீர்வாதம் பெற வேண்டும். அவ்வாறு செய்வது மிக சிறந்தது.
சோமவார விரதம் இருப்பவர்கள் சிவன் பார்வதி இணைந்திருக்கும் உருவப்படத்திற்கு வழிபாடு நடத்தி தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
கார்த்திகை, விரதம் இருப்பவர்கள் சித்திரை வைகாசி ஆவணி மார்கழி போன்ற மாதங்களில் இவரிடத்திலே திங்கட்கிழமைகளில் தொடங்கலாம்.

அன்றைய தினம் முழுவதும் சிவபுராணம் சிவன் நாமம் ஆகியவற்றை பாசுரம் செய்து சிவபெருமானை நினைத்து விரதம் இருக்க வேண்டும் மாலை தீபம் ஏற்றி ஏதாவது ஒரு நெய்வேத்தியம் படைத்து அல்லது கோவிலுக்கு சென்று உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
சோம வார விரதத்தின் பலன்கள்
சோமவார விரதம் இருந்து வருபவர்களுக்கு களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவை நீங்கும் என்று சொல்லப்படுகின்றது.
சோமவார விரதம் இருப்பதனால் விரைவில் திருமணம் நடைபெறும் கார்த்திகை மாதத்தில் பின்பற்றுவது கூடுதல் சிறப்பு தரும்.
திங்கட்கிழமை சிவபெருமான் வழிபாடு வாழ்வில் ஏற்படும் கடினமான சூழ்நிலைகளை கடக்க உதவும்.
தொடர்ந்து விரதம் இருந்து வர குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.