சமையல் குறிப்பு

சுவையான மோமோஸ் செய்யலாம் வாங்க…

சூப்பரான, ருசியான மற்றும் எனக்கு எல்லா நேரத்திலும் பிடித்த மோமோஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பகிர்ந்து கொள்கிறேன். மோமோசை காரமான மிளகாய் சட்னியுடன் சூடாக பரிமாறினால், பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊரும். ஒரு முறை சுவைத்தால் நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

வெஜ் மோமோஸ் செய்முறை, மைதா மற்றும் காய்கறிகளுடன் தயாரிக்கப்பட்ட பிரபலமான சிற்றுண்டி மற்றும் வேகவைத்த ரெசிபி. உங்கள் குழந்தைகளுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் ஏற்ற சிற்றுண்டி. இது மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் ஒரு முறை சாப்பிட்டால், சாப்பிடுவதை நிறுத்த மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் இதை மைதாவுடன் முயற்சித்தேன், நீங்கள் கோதுமை மாவுடன் இதை முயற்சி செய்யலாம். வெஜ் மோமோஸ் மிகவும் எளிமையானது மற்றும் எளிதானது, ஆனால் அதைச் சிறப்பாகச் செய்ய சில உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இருக்கிறது. மேலும், படித்து தெரிந்து கொள்ளுங்கள். முதலாவதாக, இது கோதுமை மாவில் செய்தால் ஆரோக்கியமாகவும் எளிதில் ஜீரணமாக்கும். இரண்டாவதாக, காய்கறி திணிப்பு முற்றிலும் ஆரோக்கியத்தைத் தரும் மற்றும் நீங்கள் உங்கள் விருப்பத்துடன் கலந்து செய்யலாம்.

காய்கறிகளைப் பயன்படுத்தும் போது அதை நன்றாக நறுக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக, இதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியையும் பயன்படுத்தியும் மோமோஸ் செய்யலாம். தயாரிப்பைத் தொடங்கலாம்.  

தேவையான பொருட்கள்:  

¾ கப் கோதுமை மாவு / மைதா   தேவைக்கேற்ப தண்ணீர்   தேவைக்கேற்ப உப்பு   2 தேக்கரண்டி எண்ணெய்    திணிப்பு

தயாரிப்பதற்கு:  

1 கப் நறுக்கிய முட்டைக்கோஸ்  

¼ கப் நறுக்கிய கேரட்

1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி  

4 வெங்காயம்   1/2 தேக்கரண்டி

மிளகு தூள்   1 டீஸ்பூன்

சோயா சாஸ்   1 டீஸ்பூன்

தக்காளி சாஸ்   தேவைக்கேற்ப

உப்பு  

ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு மற்றும் எண்ணெய் கலந்து  மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.  

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்பு நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.  

    அத்துடன் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், டீஸ்பூன் தக்காளி சாஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறினால் காய்கறி மசால் தயார்.  

    அடுத்ததாக பிசைந்து வைத்த மாவை நாம் தினமும் செய்யும் சப்பாத்தி,  பூரி போல் நன்றாக தேய்த்து அதில் இந்த காய்கறிகளை வைத்து நன்றாக திணித்து நமக்கு வேண்டும் வடிவத்தில் செய்து, பிறகு இட்லி பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேய்த்து மோமோசை வேகவைக்க வேண்டும்.      

    மோமோஸ் சட்னி:   சட்னி தயாரிப்பதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 2 தக்காளி, மிளகாய், காஷ்மீர் மிளகாய், பூண்டு, தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் சமைக்கவும். தக்காளி நன்றாகவும் மென்மையாகவும் இருந்தவுடன் அடுப்பை  அணைத்து குளிர்ந்து விடவும். குளிர்ந்ததும் தக்காளியின் தோலை நீக்கி மிக்சி ஜாடிக்கு மாற்றவும். தேவையான உப்பு, சர்க்கரை சேர்த்து மென்மையான பேஸ்டில் அரைக்கவும்.  

    மோமோஸ் ரெசிபி தயார். நன்றி… !!!   ——————————————————————-  

 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *