செய்திகள்தமிழகம்

முக கவசம், கையுறை மறுசுழற்சி செய்து பயன் படுத்த நவீன இயந்திரம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கேடயமாக முக கவசம் பயன்படுத்தி வருகிறோம். மேலும் கையுறை உள்ளிட்ட உபகரணங்களையும் உபயோகப்படுத்துகிறோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் இந்த வைரஸ் விட்டு வைக்காததால் இந்த நிலையில் முகக்கவசம் கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்களை புற ஊதாக் கதிர்கள் மூலம் மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் என நவீன இயந்திரத்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சமூக மருத்துவத் துறையில் பணியாற்றும் டாக்டர் பன்னீர்செல்வம் கண்டுபிடித்துள்ளார்.

ஒருமுறை பயன்படுத்தினாலும் தூக்கி எறியும் முக கவசத்தை மறுசுழற்சி செய்து நவீன இயந்திரத்தை கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கண்டுபிடிப்பு பாராட்டிற்குரியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் நர்சுகள் உள்ளிட்டோர் தங்களது பாதுகாப்பு குறித்து n95 என்ற முக கவசத்தை பயன்படுத்தி வந்தனர். இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை மறுசுழற்சி மூலம் உபயோகப்படுத்தலாம்.

டாக்டர்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு இந்த முக கவசத்தை தூக்கி எறிவார்கள். இந்த முகத்தில் உள்ள கிருமிகளை புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி அளித்து மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் புற ஊதா கதிர் கிருமிநாசினி எந்திரம் என்ற பெட்டியை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார்.

அலுமினியம் பாயில் சீட் ஒட்டப்பட்ட புற ஊதா கதிர்களை வெளிப்படுத்தும் இந்தப் பெட்டி அல்ட்ரா வயலெட் சி என்ற லைட்டுகளை பயன்படுத்தி அதில் வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் பயன்படுத்தி கிருமிகளை நீக்கும்.

எளிமையான இயந்திரத்தை வடிவமைத்து உள்ளதாகவும் இதனை செய்ய ஆயிரம் மட்டுமே தேவைப்பட்டது எனவும் பக்கவிளைவுகள் ஏற்படாதாதாகவும் அறிவித்துள்ளார். முகக் கவசம் மட்டுமல்லாமல் செல்போன், வாட்ஸ், டெதஸ்கோப், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் இந்த பெட்டியில் வைத்து கிருமி நீக்கம் செய்ய இந்தப் பெட்டி உபயோகமாக இருக்கும்.

இதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுவதாகவும் இந்த முறையில் 855 முறை கிருமி நீக்கம் செய்து பயன்படுத்தலாம். என்றும் மருத்துவமனை வார்டுகள் பயிற்சி டாக்டர்கள் விடுதி உள்ளிட்ட பகுதியில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மைக்ரோபயாலஜி துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதை கண்டுபிடித்த டாக்டர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *