செய்திகள்தேசியம்

மத்திய அரசு செல்போன் ஏற்றுமதிக்கு அனுமதி 100 பில்லியன் டாலர் மதிப்பில்

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிளின் செல்போன் அசெம்பிள் செய்யும் நிறுவனங்கள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க தொடங்கியது. அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 11 லட்சம் கோடி செல்போன் தயாரிப்பிற்கு தேவையான உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. இவ்வளர்ச்சி நாட்டின் ஏற்றுமதிக்கும், வேலை வாய்ப்புக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகின்றன.

தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் 12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் 3 லட்சம் நேரடியாகவும், 9 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபோன் வடிவமைப்பாளரான பாக்ஸ்கான், பெகற்றான், மற்றும் விஸ்ட்ரன் மற்றும் சாம்சங், கார்பன், லாவா, டெக்சான் போன்ற நிகழ்வுகளில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி, வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் ரூபாய் 7.3 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *