மனம் சந்தோசமா இருந்தா இது கிடைக்குமா..! 🤔
ஹாய் ஹலோ பிரண்ட்ஸ் தினமும் ஒரு அழகு குறிப்பு பார்த்துட்டு வரிங்க. அழகை எப்படி எல்லாம் மேம்படுத்தனும். என்ன எல்லா பண்ணலாம். ரெகுலரா பார்த்துட்டு வரீங்க. ஃபர்ஸ்ட் நம்ம மனசு எப்பவும் சந்தோஷமா வச்சுக்கணும். அது இத நெனச்சு மனசை போட்டு குழப்பிக்காம எப்பவுமே பாசிட்டிவ், மைன்டு ஆக்டிங் பண்ணிக்கிட்டே இருங்க.
மனம் சந்தோஷமாக
இதனால் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் தெளிவாக வைத்துக் கொள்ள முடியும். மனதில் தேவையில்லாத குழப்பங்களை தவிர்த்து விடுங்கள். மனம் சந்தோஷமாக இருக்க என்னென்ன செய்யலாம் என்று மட்டுமே யோசிங்க. இதனால் மற்ற யோசனைகள் நம்மை பாதிக்காது. மனம் தெளிவாக இருந்தால் நாம் அழகாக காட்சி அளிப்போம்.
அழகுக்கு அழகு சேர்க்க
காலையில் எழுந்ததும் காபி டீக்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிங்க. காலை உணவை தவிர்க்காதீர்கள். சிற்றுண்டி சாப்பிட நேரம் இல்லையென்றால் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடுங்கள். மதிய உணவின் போது ஏதோ ஒரு காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினசரி ஒரு கப் தயிர் அவசியம் சாப்பிட வேண்டும். கூந்தலுக்கும், சருமத்திற்கும் அது ஆரோக்கியத்தை தரும் கொண்டைக் கடலை அல்லது கடலைப்பருப்பை கரடுமுரடாக அரைத்து தயிர் அல்லது பால் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் கழுவுங்கள். சருமத்தின் இறந்த செல்கள் அகன்று புத்துணர்வு தரும்.
கருமை நீங்க
வெள்ளரிச் சாறு, தர்பூசணி சாறு, உருளைக்கிழங்கு சாறு ஆகிய அனைத்தையும் சம அளவு கலந்து முகம் கைகளில் தடவி வர கருமை நீங்கி சருமம் அழகு பெறும். முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்குவதற்கு தக்காளிப் பழத்தை மசித்து முகத்தில் தடவி கழுவி வரலாம்.
ஆரஞ்சுப் பழத்தோலை உலர்த்தி பொடி செய்து அத்துடன், பாதாம் விழுது, தயிர், மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர சருமம் மென்மையாகும். முகம் சிவப்பாக மாறும். தேங்காய்ப்பால் கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
ஃபாலோ பண்ணுங்க
முட்டை, எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி குளிக்க இதனால் பொடுகு தொல்லை நீங்கும். கறிவேப்பிலை விழுது, நெல்லிக்காய் விழுது, தேங்காய் பால் மூன்றையும் கலந்து தலையில் தடவி குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும். இதெல்லாம் ஃபாலோ பண்ணா மட்டும் பத்தாது.
தொடர்ந்து மனசை சந்தோஷமாக வைப்பதற்கு நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். இதனால் நாம் கொரனாவில் இருந்து மீள முடியும். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.