உங்க குழந்தைகள் குட்டையா..? இத ட்ரைப் பண்ணுங்க…
திணை வகை உணவுகள் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் வளர்ச்சியை 26-39 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினையின் ஊட்டச்சத்து நன்மைகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இந்த ‘ஸ்மார்ட் ஃபுட்’கள் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு ‘தொடர்பாக Nutrients’ என்ற’ இதழில் வெளியான தகவலில்; திணை வகைகள் தொடர்பாக 7 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டதாகவும், இந்த ஆய்வு வறண்ட வெப்ப மண்டலத்தின் சர்வதேச பயிர்கள் ஆராய்சி நிறுவனத்தில் (ICRISAT) பணிபுரியும், மூத்த விஞ்ஞானி-ஊட்டச்சத்து டாக்டர் எஸ். அனிதா தலைமையில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த முடிவில் திணை வகை உணவுகளில் இயற்கையாகவே ஊட்டச்சத்து உள்ளதாகவும், அவை குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் இடையே அதிக அளவு வளர்சியை ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினை உணவை உண்ணும் குழந்தைகளின் சராசரி உயரம் 28.2 சதவீதம், எடையில் 26 சதவீதம், கையின் நடுப்பகுதி சுற்றளவு 39 சதவீதம் மற்றும் மார்பு சுற்றளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது, என்றும், இதனால் குழந்தைகளுக்கு திணை உணவுகளை கொடுத்து வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தினை பற்றிய புரிதலையும் ஆர்வத்தையும் உருவாக்க விழிப்புணர்வு மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுடன் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.