மைக்ரோசாஃப்ட் ஆலோசனை தொடர்ந்து நிரந்தரமாக வீட்டிலே பணியாற்றலாம்
கொரோனா தொற்று நம் எல்லோருக்கும் புதிய வழிகளில் வாழவும் வேலை செய்யவும் சவால் விட்டுள்ளன என்ற கருத்தை மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து பணியாற்ற விரும்பும் பணியாளர்கள் மேலாளர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலாளர்களின் அனுமதி இல்லாமலும் வேலை செய்யலாம். வாரத்தில் 50 சதவீதத்திற்கு குறைவான நாட்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணியாற்ற முடியும் என்று மைக்ரோசாப்ட் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மார்ச் மாதம் முதலே பல நாடுகளில் வீட்டில் இருந்து பலரும் அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர்.
- அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வரை வீட்டிலிருந்தே பலரும் பணியாற்றி வருகிறார்கள்.
- அடுத்த ஆண்டு ஜனவரி வரை யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தன.
உலகமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உள்ளூர் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையில் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்ற புதிய எதார்த்தத்திற்கு வந்தன. பணியாளர்கள் விரும்பினால் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
மைக்ரோசாஃப்ட் சோதனைக் கூடங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குபவர்கள் வீட்டில் இருக்க முடியாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற முடியாது. சிலர் அதற்கு தகுதியானவர்கள் கிடையாது என்று கூறியுள்ளனர்.