மிக்ஜாம் புயல் பாதிப்பு : மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் சென்னையில் இன்று அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தற்போது கரையை கடந்து விட்டதால் என் ஜனங்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்து வருகின்றனர் ஆனாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு ,உடை, தங்கும் வசதி இல்லாமல் தவிர்த்து வருகின்றனர் இவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் இரவும் பகலும் இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனர்.
புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நிவாரண பணிகளுக்காக நிதி உதவி கேட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் நிவாரண உதவிக்காக ரூபாய். 5060 கோடி வேண்டும் என்று பிரதமர் மோடி இடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சகம் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரின் முக ஸ்டாலின் கூறியிருந்தார்.
முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க டிசம்பர் ஏழாம் தேதியான இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் சென்னைக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் தமிழக அமைச்சர்கள் வேல்முருகன் மற்றும் தென்னரசு ஆகியோரும் சேர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மத்திய அமைச்சர் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிய பின்பு வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும்.