மேட்டூர் அணை திறப்பு
முதலமைச்சரால் மேட்டூர் அணை திறப்பு:
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 12 ஜூன் 2020 மேட்டூர் அணையை திறந்துள்ளார்.
பன்னிரண்டு காவிரி டெல்டா பகுதிகளுக்கு இந்த நீர்ப்பாசனம் மூலமாக பயிர் சாகுபடி நடக்கிறது. இந்த நீர்ப்பாசனம் ஆனது சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக இந்த நீர்ப்பாசனம் உபயோகப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என்பதல்லவா அதனைத்தான் உலகம் உணர்கின்றது.
பல வருடங்களுக்கு முன்பே 12 ஜூன் அன்று வருடாந்திர மாக மேட்டூர் அணை திறப்பு காவிரி டெல்டாப் பகுதி திறக்கப்படும் என்பது வழக்கம். 2008 ஆண்டிற்குப் பிறகு இன்று மேட்டூர் அணை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் மலர் தூவி திறக்கப்பட்டது. நதிநீர் பிரச்சினை மழை நீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
இந்த மேட்டூர் அணை திறப்பு விழாவில் அமைச்சர் பி தங்கமணி, கே ஏ செங்கோட்டையன், டாக்டர் வி சரோஜா, கே சி கருப்பண்ணன் மற்றும் பல எம்.எல்.ஏ.களும் எம்.பி.களும் அரசு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
12 ஜூன் 2020 இன்று திறக்கப்பட்ட மேட்டூர் அணை 230 நாட்களுக்கு அதாவது 28 ஜனவரி 2021 வரை நீர்ப்பாசனம் இருக்கும்.
முதலில் 3000 கன அடி நீர் திறந்துவிட இரவுக்குள் 10 ஆயிரம் கன அடி நீராக மாறும். டெல்டா பகுதிகளின் தேவைக்கு ஏற்ப நீர் திறந்துவிடப்படும். 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதனால் பயன் பெறுகிறது.
மேட்டூர் அணை திறப்பால் தண்ணீர் வரும் வேகத்தில் மின் எடுக்கும் முறையான நீர் மின் ஆற்றல் (hydroelectricity) மூலமாக 460 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டு நிலையில் மூன்றே நாட்களில் திருச்சி கல்லணையை சென்றடையும்.
முதலமைச்சரின் உரை:
இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி 90 நாட்களுக்கு மேட்டூர் அணை திறந்து இருக்கும் என்று கூறினார்.
கொரோனாவால் ஊரடங்கு பற்றி அனைவரும் கேள்வி எழுப்ப ஊரடங்கு நீடிக்கப் போவதில்லை அது பற்றிய வதந்திகள் பரப்புவதை பற்றி கண்டித்துள்ளார்.
மேலும் தனியார் பள்ளிகள் குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் வசூலித்தாராயின் அதை பற்றி ஏதேனும் குற்றச்சாட்டு வந்தால் அந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
வரலாற்று தகவல்கள்:
12 ஜூன் 2020 மேட்டூர் அணை திறக்கப்படுவது வரலாற்றில் 17ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறிப்பிட்ட இந்தத் தேதி அல்லாமல் மேட்டூர் அணை திறப்பு வரலாற்றில் இது 87வது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் நீர் நிரம்பியதால் பத்துமுறை குறிப்பிட்ட இந்த 12 ஜூன் தேதிக்கு முன்பே திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீரின் அளவு குறைந்து இருந்ததால் குறிப்பிட்ட இந்த 12 ஜூன் தேதிக்கு பின் 60 முறை திறக்கப்பட்டுள்ளது.