செய்திகள்தமிழகம்

மெட்ரோவின் புதிய திட்டம் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பயணிக்கும் வசதி

ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தற்போது மெட்ரோ ரயில் சேவை செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் பயணத்தின் போது நேரடித் தொடர்புகளை தவிர்க்கும் வகையில் புதிய முறைகள் நடைமுறையில் உள்ளன.

அதாவது கியூஆர் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெறுதல், ஸ்மார்ட் கார்ட் பெறுதல் ஆகிய தொடுதல் இல்லா பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலமாக நிலைய ஊழியர் உடன் தொடர்பு தவிர்க்கப்படுவதுடன் நேரமும் சேமிக்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக தொடர்பில்லாமல் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் விதமாக புதிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளன.

இதற்கான பரிசோதனைகள் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் நிலைய தானியங்கி பயணச்சீட்டு நுழைவு வாயிலில் ஸ்மார்ட் கை கடிகாரத்தில் ஒளிரும் வெளிச்சம் மூலமாக நிலையத்தின் உள்ளே சென்று ரயிலில் எளிதாக பயணிக்க முடியும்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியுடன் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் வகையில் ஸ்மார்ட் கை கடிகாரத்தை அறிமுகம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *