விஜய்-க்கு பாஜக அனுப்பிய மெசேஜ்..?
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டில் சந்திந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் பனையூரில் உள்ள நடிகர் விஜயின் வீட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசியலை உற்று நோக்கும் சிலர் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இதனால் எதிர்கால அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
அதாவது நடிகர் விஜய்-க்கு பாஜக சார்பில் தூது சென்றவர் தான், புதுவை முதல்வர் ரங்கசாமி என கூறுகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக சில செயல்பாடுகல் விஜயிடம் தெரியக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் வழக்கம் போல், சிபிஐ அல்லது வருமான வரித்துறை ரெய்டு கூட நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.