சுற்றுலா

சிங்கார சென்னையின் மெரிசலாக்கும் மெரினா!

மதராஸ் என்னும் சிங்காரச்சென்னை, கடற்கரை நகரமாக அறியப்பட்டாலும் கடற்கரையே அடையாளமாய் அறியப்படுகிறது. கிழக்கு கடற்கரைச்சாலையில் ஒற்றையில் செல்லும் வாகனத்தைவிட அதிவேகமாய் சுழன்றுக் கொண்டிருக்கிறது உலகம். ஆனால் அதைவிட வேகமாய் கடந்து செல்கிறது வாழ்க்கையும் அதில் செய்யும் செயல்களும். இப்படி விறுவிறுப்பாக நடந்து செல்லும் செயல்களும், கடந்து செல்லும் வாழ்க்கையும், நகர்ந்து செல்கின்ற அலைகளும் கலந்த உணர்வாய் எழுந்துநிற்கிறது சென்னை மாநகரம்.

அச்சென்னை மாநகரின் சிறப்பாய், சிறப்பே அடையாளமாயும், உணர்வுகளின் உறைவிடமாயும் எழுந்து நிற்கிறது மெரினா. மானுடர் நம்பிவரும் மதராஸின் தலைவாசலாய் விளங்கும் மெரினா உலகின் இரண்டாவது, இந்தியநாட்டின் முதல் பெருங்கடலாக விளங்குகிறது இவையனைத்தும் இதன்சிறப்பாக இருந்தாலும் மெரினா இதனைக்கொண்டு முழுமையடைவதில்லை.  சென்னைமாநகரின்வாசிகளிடம் மெரினா குறித்து வினாவினாள் அப்பதில்களில் பல வண்ணங்களும், பல எண்ணங்களும் கலந்திருக்கும். மெரினா என்றவுடன் ! 

முத்துக்கிளிஞ்சல் சத்தமமும் மீனவமக்களின் நித்தமும்

சுண்டல் கூடையின் இறைச்சலும் சுண்டல் கீழை இறைத்திருப்பதும்

கரையோர காவலன் குதிரையும்

கரையிலே குடும்ப சிதரையும்

நெல்மணியிலே மெட்டுக்கள் அரும்பவும் நெஞ்சிலே இன்பம் ததும்பவும் இராட்டினம் ஊரைச் சுற்றுவும்… ஞாலம் உதயனை பற்றவும்…

என அவர்கள் புரிதலைக் கொண்டு பூர்த்திசெய்வர்கள். சிந்திப்பின் மூலமே செயல்கள் உருப்பெறுகின்றன, வளர்ச்சி என்பது அறிவை அடிப்படையாக கொண்டுதான் கட்டியெழுப்புகிறது. ஒரு புதுமனைக்கட்டுனால் அக்குடும்பத்தின் வளர்ச்சிக்கு வழிசெய்வதர்போல இருக்கும். ஆனால் ஒருகல்விசாலை உருவானால் அச்சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிசெய்தார் போல் இருக்கும். உலகிற்கு நாகரீகத்தைக் கற்றுத்தந்தவர்கள் தமிழர்கள் என்கிறோம். அறிவின் ஒளி இருக்கும் இடத்தில்தான் நாகரீகம் அடைக்கலம்புகும். எச்செயல் செய்யவேண்டும் என்றாலும் நான்கு புறம் அறிந்து செயல்படவேண்டும் என்பார்கள்.

அதுபோல மெரினாவை சுற்றிப்பார்த்தால் மதராஸ் பல்கலைக்கழகம் முதல் விவேகானந்த கலாச்சாரம் மையம்வரை அறிவுகொடுப்பதற்கே என்னும் கோட்பாடும் மூலம் அறிவைப்பல வடிவங்களில் கொடுக்கும் கிளைகள் மெரினாவைச் சுற்றியுள்ளன. பழம்பெரும் பல்கலைக்கழகமான மதராஸ் பல்கலைக்கழகம் பல பகுத்தறிவு பகலவன்களை உருவாக்கியிருக்கின்றது. எப்படி கல்விக்கு வயதில்லையோ அதே போல கல்வி கற்கவும் வயது ஒரு தடை இல்லை. வயது தாண்டியும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களின் தூரத்துவெளிச்சமாக திகழ்கிறது.

விவேகானந்தா கலாச்சார மையத்திலும் இன்றைய பலகலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. விவேகானந்தர் இல்லத்தின் அருகில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட விவேகானந்தர் பண்பாட்டு மையம் தமிழக முதல்வரால் ஜூலை 8, 2014 இல் திறந்து வைக்கப்பட்டது. இந்த பண்பாடு மையத்தில்லிருந்து வருடாவருடம் பள்ளிகளுக்கு சென்று வருங்கால தலைமுறைக்கு அந்த ஆன்மிகம் அறிஞரின் சொற்பொழிவுகளை கூறி மாணவர்கள் மனதை சீர்படுத்துகிறார்கள்.

ராணி மேரி கல்லூரி:

பெண்கல்வி காலகட்டத்தை தாண்டி வென்ற மாபெரும் மாற்றம் . மாற்றத்தை உருவாக்க தொடக்கமாக இருந்த புள்ளி ராணி மேரி கல்லூரி.

முதல் பெண் கல்லூரி, வடஇந்தியாவில் இரண்டாவது பெண் கல்லூரி, இந்தியாவின் மூன்றாம் பெண் கல்லூரி இன்னும் எத்தனை சிறப்புகளை கொண்டு இருக்கின்றதோ?!!!

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற அந்த காலத்திலும் சரி…. ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்ற இந்த காலத்திலும் சரி….

பெண்கல்வியின் முக்கியத்துவத்தை கொண்டு செயல்படும் கல்லுரிகளில் இதுவும் ஒன்று செய்யப்படுகின்றது.

அகிலஇந்தியா வானொலி நிலையம் :

அகில இந்தியாவையே சொடக்கு போட்டு 1938-இல் நிறுத்திய மனிதனின் சிறந்த பொழுதுபோக்கிற்காக இயற்கை அமைத்த வளதினிடையே மனிதன் செய்த அற்புதம். அன்றைய சரோஜா நாராயணஸ்வாமி முதல் இன்றைய லவ் குரு மற்றும் செந்தில், பாலாஜி வரை நம்மை கண்ணிமைக்கும் செய்யா நிமிடங்கள் பல. ஞாயிறு சூரியன் உதிக்க இன்றைய முத்தமனிதன் கேட்டு மகிழ்ந்த நாடகங்களும், தினமும் கேட்ட பாடல்களும், தென் கட்சி கோ ஸ்வாமிநாதனின் இன்று ஒரு தகவலும் கேட்ட மனிதர்களின் அறிவு வியக்கத்தக்கது. யாழ்ப்பாண k.s ராஜாவின் குறளை கேட்டு தமிழை ரசித்த தலைமுறை அது. இவை அனைத்தும் காலங்களில் உருண்டோனாலும் இன்றும் மறக்க முடியாத ஒளிகள். நம் இன்று கேட்க முடியாத குரலில் வந்த புனிதப்பக்கங்களும்…நாம் இன்று மறக்கும் அழிய கலைகளான வில்லு பாட்டும், திரையில் ரசித்த நடக்காங்களும் அன்று செவியில் கேட்ட அழகிய நாட்களை அங்கு செல்லும்பொழுது ரசிக்கலாம்.

இப்படி மெரினாவைச் சுற்றி பல கலைகளும், அறிவும், பல கலைஞர்களின் அழியாதீபமாய் பலர் வாழ்க்கையில் பிரகாசத்தைக் கொண்டு வந்ததாகவே இருக்கிறது. உலகில் அண்டம் உருவாகும் முன்பே அறிவு வளர்ந்துவிட்டது. ஆம் அறிவு இப்பிரபஞ்சத்தை ஆட்டிவைத்திருக்கிறது. அது காற்றில் கலந்திருக்கிறது. அதை சுவாசிக்கமட்டுமல்லாமல் யோசிக்கவும் பயன்படுத்துங்கள். மெரினாவைச் சுற்றி மட்டும்மல்லாமல் மெரினாவிலும் கற்க பல சங்கதிகள் உள்ளன. கலாமின் கனவுகள் தொடங்கியதும் கடற்கரையிலே. பல தலைவர்களை அடுத்த தலைமுறை நினைவுகூரும் நினைவிடமாய் உள்ள நினைவிடம்மூலம் அவர்களின் நினைவுகளை பாடமாய் மாற்றி, கற்காமட்டு்மல்லாமல் கற்பிக்கவும் செய்யலாம். முதலில் கூறிய கோட்பாடான அறிவு கொடுப்பதற்கே என்பதற்கு எடுத்துகாட்டாய் தன் மரபின் பெருமையை அழியவிடாமல் அடுத்தத் தலைமுறைக்கு அடைகாத்துக் தந்து களத்தில் காயத்துடனும் சதைப்பிண்டமாகவும் கடலோரக் கரையில் போராடியவர்களில் கண்ணோட்டம் ஒரு பெர்னாட்ஷாவை, ஓர் காந்தியை அல்ல மக்களின் மக்களான பல தலைவர்களை, இன்னும் பல சிந்தனையாளர்களையும் சிந்தனைகளையும் வெளிக்கொணர வேண்டும். இதில் நாகரீகக் கல்வியைப் பற்றிக் கூறவேண்டும் என்றால் மெரினாவில் மட்டுமல்ல எங்கு தொடங்கிய அலையும் கரையைவந்து அடையதான்வேண்டும்.

அலைமகளின் அன்பு முத்தம் அது

காதில் வந்துசேரும் இனிய சத்தம்

நிலமகளின் நேசமேனி அதில்படற

பாசத்தோடு வரும் கடலலையே நீ !!!

மானுடர் நம்பிவரும் மதராசின்

தலைவாசலாய் விளங்கும் மெரினா தவித்துவரும் மானுடர்க்கு தாயுள்ளம் கொண்டு அடைக்கலம் தந்த ஆலயம்.

காலை நேரம் வசந்தம் போல் ஆலயத்தை சுற்றி நிற்கும் கல்விக்கூடங்களும்

மாலை நேர தென்றல் காற்றில் முத்து கிளிஞ்சல் சத்தத்துடன் மதிய வெயிலில் கருவாடுபோல் காய்ந்து பொன்மணலின் தன்மை மாறாத நிலத்தில் சுற்றித்திரியும் ஓர் உயிரினமாம் நம் மனம் !

நிலவொளியை தவிர்த்து காரிருள்முடிய நிலத்தில் கண்சிமிட்டும் அளவிற்கு வெளிட்சம் – கடைவீதி சங்கின் ரீங்காரம் ஒருபுறமும் செங்கமழம் வாசனை திரவியம் ஒரு புறமும் நெற்பயிறில் பிடித்ததை செதுக்குவோர் மறுபுறமும் கொண்டாட்டம் புடை சூழ சுற்றில் சீதைத்து விளையாடும் சிறுமிகள் இருப்பதற்கு இடமில்லையெனும் மணலில் கோட்டைக்கட்டி விளையாடும் சிட்டுகள்.

உலகை சுற்றும் கனவுடன் இராட்டினத்தில் சுற்றும் இளசுகள் உலகை மறந்த மனிதர்களுக்கு உலகை மதிக்க நிற்கும் மனிதர்களும் கோபித்துக்கொள்ளும் காதலிக்கு ஐஸ்வைத்து நைஸ் செய்ய இருக்கவே இருக்கு நாகராஜ் அண்ணனின் kulfi ஐஸ்கடை மெரினாவில் ஆயிரம் சத்தம் ஒலித்தாலும் மறக்கமுடியாத சத்தம் சுண்டல் சின்னஜிரு தொழிலாளிகளின் இரைப்பையே நிரப்ப அக்க்ஷயபாத்திரமாக இருக்கிறது சுந்தரி அக்காவின் கரையோர சாப்பாட்டு கடை மதராஸ் என்னும் சென்னையின் அடையாளமாய் மாடிவீடு முதல் மண்குடுசைவரை விரும்பும் ஓர் இடமாய் பல வண்ணங்களும் பல எண்ணங்களும் நிறைந்த புதுஇடமாய் பல தலைவர்களை அடித்த தலைமுறை நினைவுகூறும் நினைவிடமாய் பல தலைவர்களை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலன் உருவாக்கிய சிறுஇடமாய் நம் மனத்தை இவ்விடத்திலிருந்து எடுக்கமுடியாமல் பிரியாவிடை கொடுத்து செல்வோம் புதிய விடியலை நோக்கி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *