ஆன்மிகம்ஆலோசனை

ஆண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை

வீடு லட்சுமி கடாட்சத்துடன் சுபிட்சமாக இருக்க வீட்டில் சண்டைகள் இல்லாத, ஒற்றுமையாக இருக்கக்கூடிய குடும்பமாக இருக்க வேண்டும். ஒரு வீட்டில் நடக்கக்கூடிய தவறுகளை அந்த வீட்டின் பெண்கள் மூலமாக அந்த வீட்டின் குலதெய்வம் வெளிப்படுத்தும் என்பதை பெரும்பாலான வீட்டு ஆண்கள் உணர்வதில்லை. அந்த காலத்தில் வீட்டில் உள்ள பெண்களை குல தெய்வமாக மதித்து வந்தனர்.

மனைவி மற்றும் அக்குடும்பத்தின் பெண்குழந்தைகளை மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்துவார்கள். இதனால் தான் அந்தக் காலத்தில் தனம், தானியத்துடன் குறைவில்லாமல் பல குழந்தைகளைப் பெற்று சந்தோஷமாக கவலை இன்றி வாழ்ந்தனர். எந்த வீட்டில் பெண்களின் பேச்சு ஆண்கள் கேட்கவில்லையோ, அந்த வீட்டு ஆண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது இதுதான் காரணம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

ஒரு வீட்டில் ஆண் பேச்சை கேட்கவில்லை என்றால் அம்மன் கோவில்களுக்கு சென்று பெண்கள் வழிபட்டு அம்மன் கோவிலிலுள்ள குங்கும பிரசாதத்தை மோதிர விரலால் நெற்றியிலும், வகிட்டிலும், மாங்கல்யத்தில் வைத்துக்கொள்ள படிப்படியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இப்படி செய்து வருவதால் உங்கள் பேச்சை கணவர் தட்ட மாட்டார். மேலும் குடும்ப ஒற்றுமைக்காக குடும்பத்தின் நலனுக்காக ஒவ்வொரு குடும்ப பெண்களும் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க : அரசமரத்தை வணங்குவது மூடத்தனமா!!!

பெண்கள் பின்னால் வருவதை முன்கூட்டியே யோசிக்கும் புத்தி உடையதால் தான், ‘பெண் புத்தி பின் புத்தி’ என்ற பேச்சுவாக்கில் வந்தன. கணவன்-மனைவிக்கு மட்டுமன்றி, அக்கா-தங்கைகளுக்கு சகோதர ஸ்தானத்தில் இருப்பவர்களும், தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு அப்பா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

சில விஷயத்தை பெண்கள் எடுத்துச் சொல்லும்போது செவிகொடுத்து கேட்டு வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பதால் நடப்பதை இதைப் படிக்கும் ஆண்கள் யோசித்துப் பாருங்கள் வெற்றி நிச்சயம் உண்டு. வீட்டிற்கு வரும் கஷ்டத்தை, கெடுதல்களை குலதெய்வம் வீட்டின் பெண்கள் மூலமாக வெளிப்படுத்துகிறது என்பதை மறவ வேண்டாம். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பதை விட்டுவிட வேண்டும். அனுபவப்பூர்வமான உண்மை என்பதால் இதைக் கடைப்பிடித்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.

மேலும் படிக்க : வளமான வாழ்வு தரும் ஆனி மாதப் பௌர்ணமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *