சுற்றுலா

சென்னை சுற்றியுள்ள நினைவகங்கள் அணிவரிசை பார்ப்போம் வாங்க!

சென்னையை சுற்றியுள்ள முக்கிய நினைவகங்கள் அறிவியல் பூங்காக்கள் அவசரயுகத்தில் நம்மை அமைதிப்படுத்த வந்தவையாகும். விடுமுறை நாட்களிலும் மற்ற நாட்களிலும் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய பகுதிகளில் ஒன்றாக இதனை  நாம் கருதலாம்.

அறிஞர் அண்ணா நினைவகம்:

தமிழகத்தின் ஒப்பற்ற தலைவராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்த அறிஞர் அண்ணா திருக்குறளை அமெரிக்கா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பயிற்றுவித்தவர். அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தால் “சப் பெல்லோவ்ஷிப்” என்ற மிக உயர்ந்த விருதினை பெற்றார். தமிழக அரசியல் வரலாற்றிலேயே அண்ணாவிற்கு முன் அண்ணாவிற்கு பின் என்ற பெயரை அரசியல் வரலாற்றில் பொறுத்தவர். இவருடைய நினைவாக கட்டப்பட்ட சின்னம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.

பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 00மணி வரை.

மகாகவி பாரதியார் நினைவு இல்லம்:

எட்டயபுரத்து கவி என்று அழைக்கப்பட்ட மகாகவி பாரதியார். பாரதி என்றும் மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார் பாரதி ஒரு கவிஞர் எழுத்தாளர் பத்திரிக்கையாசிரியர் விடுதலை வீரர் சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளன். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சாமிநாதையர், வா.வூ.சிதம்பரம் பிள்ளை மகான் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சிய  எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் பட்டம் வழங்கப்பட்டது.  மகாகவி பாரதியார் பிறந்த ஆண்டு 1882 ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னசாமி லட்சுமி தம்பதியினருக்கு பிறந்தார்.

பாடல்களில் சுழற்சியின் வெளிப்பாடு இருந்தது. இவருடைய காலகட்டத்து கவிஞர்கள் அனைவருடனும் சேர்ந்து ஆங்கிலேயரை கதிகலக்கிய புரட்சிக் கவிஞராக விளங்கியவர். இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். கவிதைகள் அரசுடமையாக்கப்பட்டு உள்ளன. இவரின் நினைவாக சென்னையில் திருவல்லிக்கேணியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வை நேரம்: காலை 9.00 முதல் 6.30 மணி வரை.

ராஜீவ் காந்தி நினைவகம்:

இந்தியாவில் மிகத் திறமையான இளைய பிரதமரான ராஜீவ்காந்தி டேராடூன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிறந்த விமானி. இவர் இந்தியாவின் ஒப்பற்ற பிரதமராக எல்லோராலும் பாராட்டப் பெற்றவர். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் 1991 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் படுகொலை ஆனார். அந்த இடத்தில் அவரது நினைவக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 

போர் நினைவகம்:

முதல் உலகப் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக மெரினா கடற்கரைச் சாலையில் தீவுத்திடல் அருகில் வட்டவடிவ போர் நினைவகம் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் பளிங்கு கற்களினால் கட்டப்பட்டுள்ளது.

அமைவிடம்: மெரினா கடற்கரைச் சாலையில் தீவுத்திடல் அருகில்.

சென்னையில் அமைந்துள்ள விலங்கியல் பூங்காக்கள்:

கிண்டி தேசியப் பூங்கா:

சென்னையில் காண வேண்டிய இடங்களில் மிக முக்கியமானது கிண்டி தேசியப் பூங்கா. இது சென்னை நகரின் எல்லைக்குட்பட்டு அமைந்துள்ளது. பல்வேறு வகையான அடர்ந்த மரங்கள் நிறைந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மத்தியில் இப்பூங்கா அமைந்துள்ளது. சென்னையின் இதயம்போல அமைந்திருக்கும் இப்பூங்காவில் படையும் பல விதமாக மான்கள் அதிக அளவில் இருக்கின்றன. புள்ளி மான்கள், குரங்குகள், இந்திய புனுகு பூனைகள் போன்ற விலங்குகளும் மீன்கொத்தி, புளு ஜே காடை,லாபிங், சைக்கிள் போன்ற பறவை இனங்களும் இங்கு காணப்படுகின்றன. நல்ல பராமரிப்பு மிக்க பூங்காவின் பார்வைகளுக்கு போக்காக அமைகின்றன. இயற்கையின் அழகை ரசிக்க செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிக இனிமையான விருந்தாக இடமாக உள்ளது.

பார்வை நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

அமைவிடம்: கிண்டி, சென்னை 600032.

முதலைப் பண்ணை:

சென்னையிலிருந்து செல்லும் சாலையில் 44 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முதலைப்பண்ணை. சுற்றுலாப் பயணிகளுக்கான போதுமான வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்புடன் கண்டுகளிக்க வேலைகளுடன் தகுந்த இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளங்கள் குழிகள் இடையே அலிகேட்டர் இனம் உட்பட உலகின் பல்வேறு இன முதலைகளும் இங்கு காணப்படுகின்றன. மேலும் இங்கு பாம்பிலிருந்து விஷத்தை எடுக்கும் பகுதியும் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியினரால் விஷத்தை பிரிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது குறித்து செயல்முறை விளக்கம் விளக்கி காட்டப்படுகின்றது.

பார்வை நேரம் : கலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

அமைவிடம்: சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலை.

அறிஞர் அண்ணா பூங்கா:

சென்னையிலிருந்து புறநகர் செல்லும் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது விலங்கியல் பூங்கா. இங்கு விலங்குகள் அடைக்கப்படாமல் இயற்கையான சுற்றுச் சூழ்நிலையில் விடப்பட்டு, சுற்றிலும் வேலி போன்ற அகழி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் சுதந்திரமாக உலாவுகின்றன. இரவில் நடமாடும் விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்றவை இங்கு குறிப்பிடத்தக்க விலங்கினங்கள், சிங்கங்கள் இப் பூங்காவின் சிறப்பம்சம். இப்பூங்காவை பார்க்க நான்கு சக்கர வாகனங்கள் எங்கு கிடைக்கும். இது சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அமைவிடம்: வண்டலூர், சென்னை 600048.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *