2022ம் ஆண்டு ஐபிஎல்-க்கான மெகா ஏலம்
⭐2022ம் ஆண்டு ஐபிஎல்-க்கான மெகா ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆதாம் மில்னே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
⭐இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆல்-ரௌண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
⭐நியூசிலாந்து அணியைச் சேர்ந்த பேட்டர் தேவன் கான்வே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் சமீப காலத்தில் நியூசிலாந்து அணிக்காகச் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
⭐ உலகக் கோப்பை வென்ற ஜூனியர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கங்கேக்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
⭐உலகக் கோப்பை வென்ற ஜூனியர் இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல், டில்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ப்ரித்வி ஷா, உன்முக்த் சந்த் ஆகியோருக்குப் பிறகு, கேப்டனாக இருந்து ஜூனியர் உலகக்கோப்பை வென்ற இவருக்கு ஐபிஎல்-ல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
⭐இலங்கை அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை அணியில் புதிரான சுழற்பந்து வீச்சாளர் என அழைக்கப்படுகிறார்.
⭐ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
⭐ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் சேட்டன் சகாரியா, டில்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.