திரிபலாவின் மருத்துவ மகிமை…!
நமது நாட்டில் தோன்றி மிகப் பழமையான பாரம்பரிய மருத்துவமுறை தான் ஆயுர்வேத மருத்துவம். இதில் பயன்படுத்தத் தக்க மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் திரிபலா சூரணம் மருந்து. திரிபலா ஏன் கட்டாயம் சாப்பிடவேண்டும், திரிபலா பொடி நல்லதா? திரிபலா மாத்திரை வடிவில் சாப்பிடுவது நல்லதா? எப்படி எப்படி சாப்பிட்டால் பலன் அதிகம் போன்ற பல கேள்விகளுக்கு தீர்வுகள் இந்தப் பதிவில் பார்ப்போம்.
நமது அன்றாட வாழ்வியலில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் ஒரு அங்கமாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் பசியின்மை, அசிடிட்டி, அடிவயிற்றுவலி போன்ற பல பிரச்சினைகள் உண்டாவது வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய கோளாறுகள் மற்றும் சரும பாதிப்புகள், பார்வை குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு போன்ற பல பாதிப்புகள் உடலில் உண்டாக்குகின்றது. இந்த நிலையில் வழக்கமான ஆன்டிபயாடிக் மாத்திரைகள் திரிபலாவின் நன்மைகளை போல சிறந்த நன்மைகளை வழங்குவது இல்லை. அது நல்லதும் இல்லை. திரிபலா என்பது மூன்று மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் என்ற மூன்று பழங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது அனைத்து மூலிகை சிகிச்சைகளில் மிகவும் ஏற்றதாகவும் மற்றும் சிறந்த இயற்கை பொருட்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
திரிபலா சூரணம்
நோய்கள் அண்டாது ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கம் ஆகும். இந்த சக்தி நம் உடலில் எப்போதும் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களை தாண்டி உடலின் உள்ளே நுழையும். அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும்.
ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகின்றது. சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாத நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில் மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கின்றன. மலச்சிக்கல் பிரச்சினை தீரவும், உடல் சுத்திகரிக்கவும் திரிபலா சிறப்பாக செயல்படுகின்றது.
மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். இயல்பைவிட உடல் பருமனானவர்கள் திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். திரிபலாவின் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவ குணம் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.நமது உடலில் கொழுப்பு படிவது காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால் கொழுப்பின் அளவு குறைந்து உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
திரிபலா சூரணம் இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால் சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றுகின்றது.
சாக்லெட் மற்றும் இனிப்புகள் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி, புழு தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவர்களுக்கு திரிபலா சூரணத்தை அவ்வப்போது கொடுத்து வருவதால் வயிற்றிலிருந்து புழுக்களை வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் உடலில் பூச்சிகளும் நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை
நமக்கு இரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம் என்றாலும் பல சத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்புத் திறனையும் பலப்படுத்துகின்றது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகின்றது. உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். நமது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.