ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

குடி பழக்கத்தை குறைக்கனுமா!

மருத்துவப் பயன்களை கொண்ட அன்னாச்சி பழம் உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. பழுக்காத பழத்தை உண்பதால் வயிற்றுப்போக்கும், அஜீரணமும், நாக்கில் வெடிப்பு உண்டாகிறது. எனவே நன்கு பழுத்த பைனாப்பிள் உடலுக்கு சிறந்தது. ஜீரணத்திற்கு மிகவும் தேவையான பிரோமிலின் எனப்படும் என்சைம் உள்ளன. வயிற்றுக் கோளாறுகளுக்கு மிகவும் பயனுள்ளது.

  • நன்கு பழுத்த பைனாப்பிள் உடலுக்கு சிறந்தது.
  • பழுக்காத பழத்தை உண்பதால் வயிற்றுப்போக்கும், அஜீரணமும், நாக்கில் வெடிப்பு உண்டாகிறது.
  • வயிற்றுக் கோளாறுகளுக்கு மிகவும் பயனுள்ளது.

கைகண்ட மருந்து அன்னாச்சி பழம்

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலுக்கு இது கைகண்ட மருந்து. விட்டமின் சி சத்து 50 மில்லி கிராம் என்ற அளவிலும், கரோட்டின் சத்து அதிகளவில் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீர் எரிச்சல் போன்ற தொல்லைகளுக்கு நிவாரணியாக அமைகிறது.

புகைப் பழக்கமா

சில சமயங்களில் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் விளைவுகளை நீக்க இப்பழத்தின் சாறு உதவுகிறது. ஒரு சிறந்த தனித் தன்மைகளில் புகைப் பழக்கம் கொண்டவர்கள், புகைக்கும் போது இவர்களின் ரத்தத்தில் வைட்டமின் சி சத்து குறைவுபடும். இதனால் தொடர்ந்து பழத்தை உட்கொண்டு வரும் போது ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்து, மேற்கொண்டு புகைப்பது இவர்களுக்கு உள்ள மோகமும் நாளடைவில் குறைந்து விடும்.

விட்டமின் சி குறைவா

உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் பழத்தின் சாறு எடுத்து மிளகு சேர்த்து தினமும் பருகி வருவதால் காலையில் ஏற்படும் சோர்வு, சளித்தொல்லை, மூல நோய், ரத்த சோகை, விட்டமின் சி குறைவால் ஏற்படும் ஸ்கர்வி என்ற தோல் நோய் போன்றவை நலம் பெறும்.

யானைக்கால் வியாதி

தொண்டையின் வியாதி, டான்சில் போன்றவற்றிற்கு பழச்சாறை வாயிலிட்டு கொப்பளிக்கலாம். குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கொடுத்து வருவதால் தொண்டை வியாதி, அஜீரணம் போன்றவை ஏற்படாது. யானைக்கால் வியாதி, தோல் நோய்கள், சொரி சிரங்கு போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்தி நல்ல நிவாரணம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளன.

அன்னாச்சி பழம் சாறு

அன்னாச்சி பழம் தோல் நீக்கி நறுக்கி சாறு எடுத்துக் கொண்டு இதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து வடிகட்டி சிறிது சூடாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் நன்கு தாகம் தணிப்பதுடன் நோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது.

மஞ்சள் காமாலை, இருதயத்திற்கு போதுமான ரத்தம் ஓட்டம் இல்லாததால் மார்புவலி, கல்லீரல் வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏதேனும் தொல்லை இருத்தல், நெஞ்சு படபடப்பு போன்றவை சரியாக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *