தோல் பிரச்னையை போக்க நன்னாரி..!!
நன்னாரி வேரை சிறிதளவு எடுத்து இடித்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி ஐம்பது மில்லி அளவு இரண்டு வேலை குடித்து வர தோல் நோய்கள், ஜீரண பிரச்னை சரியாகும். மிளகு, உப்பு, புளி, நன்னாரி வேர், இலை, காய், கொடி, பூ முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி, பொடி செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர வியர்வை நாற்றம் போகும்.
உடல் குளிர்ச்சி
நன்னாரி வேரை கழுவி காயவைத்து நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ளவும். வெயில் காலத்தில் இந்த வேரை மண்பானையில் இட்டு நீர் சேர்த்து வைத்திருந்து இரவு முழுதும் ஊற வைத்து வடிகட்டி குடித்து வருவதால் உடல் குளிர்ச்சி அடையும். பெரு நன்னாரி கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிட கல்லீரல் நோய் குணமாகும்.
வயிறு, குடல் நோய்கள் குணமாகும். இந்த வேர் பொடியுடன், சோற்றுக்கற்றாழை சாறு கலந்து கொடுத்து வர விஷமுறிவு தடுக்கப்படும். நன்னாரி வேர் சூரணம் வெண்ணெயில் கலந்து மாலை காலை சாப்பிட்டு வந்தால் ஆரம்ப குஷ்டம் சரியாகும். தேனில் கலந்து சாப்பிட காமாலை சரியாகும்.
நன்னாரி வேர் பட்டையை, நீரில் ஊறவைத்து அதனுடன் பால்,சர்க்கரை கலந்து குழந்தைக்கு கொடுக்க, உடலை தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும். இந்த வேரை வாழை இலையில் வைத்து கட்டி, எரித்து சாம்பல் ஆக்கி அதனுடன் தேவையான அளவு சீரகம், சர்க்கரை சேர்த்து பொடித்து சாப்பிட்டுவந்தால், சிறுநீரக நோய் அனைத்தும் விலகி போகும்.
பச்சை நன்னாரி வேரை பத்து கிராம் அளவு அரைத்து, நூற்றைம்பது மில்லி பாலில் கலந்து குடிக்க மேக அனல், மூலசூடு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல், ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வர நரை முடி மற்றும் தன்மை கொண்டது.
ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்தம், பால்வினை, மெகா நோய் போக நல்ல மருந்தாக பயன்படுகிறது. பச்சை நன்னாரி வேரை பத்து கிராம் அளவு அரைத்து, ஒரு டம்ளர் பாலில் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும். உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை உரமாக்கும் தன்மை கொண்டுள்ளது.
நன்னாரி வேர்த்தூளை இரண்டு ஸ்பூன் எடுத்து, பசும் பாலில் கலந்து குடிப்பதால், சிறுநீர் கட்டு சரியாகிவிடும். நன்னாரி வேர்த்தூள் ஒரு பங்குடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து சர்க்கரை ஒரு பங்கு சேர்த்து மணப்பாகு செய்து, பத்து மில்லி, தினமும் ஒரு வேலை சாப்பிட்டு வருவதால் உடல் சூடு குறையும்.
சித்தமருந்தில் – நன்னாரி வேர்
சித்தமருந்தில் நன்னாரி வேர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் எங்கும் வளரக்கூடிய கொடிவகையை சேர்ந்த இந்த வேர் வாசனையானது , கெட்டித்தன்மை கொண்டது. இதன் இலை மாற்றிலை அமைப்பு கொண்டது. மீன் அல்லது நீண்டு காணப்படும் இதன் இலைகள். இதன் தண்டு குறுக்கு வெட்டு வட்டமாகவும், மெல்லியதாகவும் காணப்படும். இதன் வேரை நீரில் போடு கொதிவிட்டு வடித்து ரசமாக சர்க்கரை கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல் போகும்.