அருமருந்தாகும் உலர் திராட்சையை கண்டால் விடாதீங்க!
பழங்களில் அனைத்து பழங்களும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் உலர் திராட்சையின் பலன்கள் எனிலடங்காதவை. திராட்சையில் பச்சை, கருப்பு, கொட்டை உள்ளது, கொட்டை இல்லாதது என பல வகைகள் இருந்தாலும் இந்த உலர் திராட்சை ஒரு அருமருந்தாக கருதப்படுகிறது. இது எந்த பருவத்திலும் கிடைக்கும். நமக்குரிய பிரச்னையில் முக்கிய பிரச்னையை போக்கவல்லது.
வயிற்றுப்புண்
உலர் திராட்சை சுண்ணாம்பு சத்து உள்ளதால் இதை அன்றாடம் எடுத்து கொள்வதால் மருத்துவ சிகிச்சைக்கு கட்டு படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். திராட்சை பழமாகவோ, ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம். இதை வாயில் வைத்து சப்பி மென்று சிறிது சாறாக இறக்க எலும்பு மஞ்சைகள் பலமடைந்து, ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும்.
குடல் புண்
அல்சர் போன்ற குடல் புண், மலச்சிக்கல், கை, கால் எரிச்சலை போக்கும். இதில் எதை வேண்டுமானாலும் உண்ணலாம். பலம் ஜூஸ் சாப்பிட்டால் சளி தொந்தரவு ஏற்படும் என்பவர்கள் உலர் பலன்களை சாப்பிடலாம். தினமும் இரவு ஒரு ஸ்பூன் உலர் திராட்சை எடுத்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு இரவு இதை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை மசித்து அந்த நீரை கொடுத்து வர மலச்சிக்கல் பிரச்சனை வராது.
உஷ்ணத்தை குறைக்கும்
இதனை அடிக்கடி சாப்பிடுவதால் நம் உடலின் மாற்றத்தை நம்மால் உணர முடியும். வாய் குமட்டல், வாய் கசப்பு, வாந்தி உள்ள கர்ப்பிணிகள் இதை சாப்பிட நல்ல மாற்றம் தெரியும். உடலில் ரத்தம் ஊற இதை தினமும் சாப்பிடலாம். உடல் உஷ்ணத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்க தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரவும்.
தேக பலத்துடன் வளர
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை போக்கும். குழந்தைகளுக்கு தேவையான சத்து கிடைக்கும். உலர் திராட்சையை எப்பொழுதும் தண்ணிரில் கழுவி ஊற விட்டு பிறகுதான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தினமும் 15 உலர் திராச்சை ஊற வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் தேக பலத்துடன் வளர்வார்கள். பற்கள், எலும்புகள் உறுதியாகும்.
எலும்புகள் உறுதியாக
50 வயதுக்கு மேல் இந்த உலர் திராட்சை ஊற வைத்து சாப்பிட உடல் பலம் சுறுசுறுப்பு ஆவதுடன் பற்கள் பலமாகவும், எலும்புகள் உறுதியாகவும், இதயம் பலத்துடன் இருக்கும். கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு பால் உற்பத்தியாகும். வளரும் போது குழந்தைகளின் கால்கள் வளையாது வளரும். இளம் பெண்கள் தினமும் இதை எடுத்து கொண்டால் முடி கொட்டும் பிரச்சனை வராது.
இவ்வளவு சத்துள்ள இந்த உலர் திராட்சையை சாப்பிட்டு நீங்கள் பயன் அடைவதோடு உங்கள் குழந்தைகளுக்கும் இதை சொல்லி குடுத்து சாப்பிட பழக்குங்கள்.
மேலும் படிக்க
Pingback: எப்பேர்ப்பட்ட சிரமத்தையும் போக்குமாம் சீரகம்..!! | SlateKuchi