வாழைப்பழத்தின் சத்துக்கள் தெரியுமா..??
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கால்சியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் சத்துக்கள் உள்ள இதை இரவு உணவுக்கு பின் அல்லது மாலை உணவாக உண்பதால் உடலுக்கு புத்துணர்வு தருகிறது. நன்றாக பழுக்காத வாழைப்பழத்தை சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். வாழைக்காயை சிப்ஸ் செய்து சாப்பிடலாம். முக்கனிகளில் ஒன்றான இந்த வாழைப்பழம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

இதிலுள்ள இனிப்பு தன்மை இளமையாக இருக்க உதவுகிறது. இதிலுள்ள பெக்டின் குடலில் உள்ள நீரை உறுஞ்சி உள் உறுப்புகளை சீராக இயங்க செய்வதால், நன்றாக ஜீரணம் ஆகி மலச்சிக்கலை போக்கும். மலச்சிக்கல் போக்குவதால் தோல் அலர்ஜி, அரிப்பு ஏற்படாது. இதில், இரும்பு சத்து இருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரித்து, ரத்த சோகையை குணப்படுத்தும்.
ப்ரூட் சாலட்
அல்சர், சீறுநீரக நோய், மூட்டு வலி உடல் பருமன் இயற்கை மருந்தாக உள்ளது. வாழை பழத்தை பொடியாக நறுக்கி மற்ற பழங்களுடன் கலந்து ப்ரூட் சாலட் ஆக சாப்பிடலாம். வாழைக்காயில் இருபத்திஐந்து சதவீத மாவுசத்து உள்ளது. வாழைக்காய் பழுக்கும் போது இனிப்பு சத்தாக மாறுகிறது. பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் இதை சாப்பிட கூடாது.
ஒரு வாழை பழத்தை ஒரு டம்பளர் பாலுடன் தினமும் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலம் சரியாகும். சாப்பிடும் அரை மணி நேரம் முன்னதாக வாழைப்பழம் சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும். தேன், வாழைப்பழம் கலந்து சாப்பிடலாம். நெல்லிச்சாறுடன் பழுத்த வாழைப்பழத்தை கலந்து சாப்பிட இருமல் கட்டு படும். தயிர், இளநீர், வாழைப்பழம், தேன் கலந்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.
வாழை இலை
வெந்நீர் காயம், தீக்காயம், சூடான எண்ணெய் பட்ட காயம், இது போன்ற காயத்திற்கு வாழை இலையை கட்டலாம் அல்லது வாழைப்பூ சாறை தடவினாலும் குணம் ஆகும். தோல் புண்கள், காயங்கள் மீது தேங்காய் எண்ணெய் துணி நனைத்து தடவி அதன் மேல் வாழை இலையை கட்டு போடலாம். சின்னம்மை, படுக்கை புண், உடலில் தீக்காயம் ஏற்பட்டால், பெரிய வாழை இலையை தேன் தடவி அதில் படுக்க வைக்கலாம். தொடர்ந்து படுக்க குணமாகும்.
குடற்புழுக்கள்
குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலசுரப்பி, ரத்தசோகை, தொழு நோய்கள் உள்ளவர்கள், வாழை வேரை தீயில் கொழுத்தி, அந்த சாம்பலை கால் தேக்கரண்டி தேனில் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால், இவை சரியாகும். உணவுக்காக பயன்படும் தாவரங்களில், மருத்துவ பயனுள்ள தாவரமாக வாழை விளங்குகிறது. பல நோய்களை போக்கும் இயற்கை உணவாக வாழை இலை, பூ, காய்,பழம் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்து உள்ளன.