இறைச்சி கடைகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் நாம் ஊரடங்கு அறிவித்த இந்த காலகட்டத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக மாநகராட்சி மிகவும் கடினமாக உறுதியாக இந்த முடிவை எடுத்து அமல்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அமலாகிறது. இதன் படி வரும் 30ம் தேதி வரை 30-ஆம் தேதி இரவு நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். இந்த கால கட்டத்தில் சென்னையில் மிகவும் கடினமான ஊரடங்கு பின்பற்றப்படும்.
இறைச்சி கடைகள் இயங்காது. சென்னை மாநகராட்சி இதனைக் குறித்து தெளிவான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 4 மாவட்டங்களில் ஊரடங்கு என்பதால் சென்னை மாநகராட்சி பெரம்பூர் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை இவ்விடங்களில் இறைச்சி கூடங்கள் இயங்கி வருகின்றது.
தமிழக அரசு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் 19-ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்பதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் நிச்சயமாக இறைச்சிக்கடைகள் அனுமதிக்கப்படாது.
கோழி, ஆடு, மாடு, மீன் ஆகியவை அனைத்தும் முழுமையாக 12 நாட்கள் மூடப்படுகின்றன. பெருந்தோட்ட தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இதற்கு முன் காலத்தில் இறைச்சி கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.