ஆன்மிகம்வாழ்க்கை முறை

வருடப்பிறப்பின் அர்த்தமும் அதன் கொண்டாட்டமும் அறிவோமா!

நாம் வாழும் இந்த நாட்களில் ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கையில் சிலவற்றை சிந்திக்கலாமா!!! ஏன், எதற்கு என ஆலோசிப்போமா, அது அறிவை வழக்கும் ஆரோக்கியச் சிந்தனையை தேடலாக்கி நம்மை ஞானமாக்கும்.

வருடம் எவ்வாறு ஓடுகிறது? எதாவது தெரியுங்களா இதைப் பத்தி முன் பின் யோசிச்சது உண்டா,

வருடப்பிறப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதுங்க,

சாஸ்திரத்தின் படி இவை ஐந்து வகைகள் இருக்கின்றது. அவை

  1. ஸாவனம்
  2. சௌரம்
  3. சாந்திரம்
  4. நாக்ஷத்ரம்
  5. பார்ஹஸ்பத்தியம்

இவை ஒவ்வொன்றிலும் வருடம் கணக்கிடுகையில்  வேறுபட்டு அமைகிறது. இதெல்லாம் எனக்கு எதற்கு என்ற கேள்வியை விடுத்து இதுவும் எனக்கு தெரியும் என உங்கள் காலரை நீங்களே தூக்கிவிட்டுக்களாம். இப்போ வாங்க சாஸ்திரம் அறிவோம்.

ஸாவனம்

ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் விகிதமாக 12 மாதங்கள் கொண்டு 360 நாட்கள் கொண்டது ஸாவன வருடம்ன்னு சொல்லுவாங்க, அட இது ஈஸியாச்சே ஆனா இந்த ஸாவனம்தான் புதுசா இருக்கு, ஸாவனம் எப்படி நியாபகம் வச்சுக்கலாம், ம்… சாந்தி சாந்தி… சான்னா அமைதி சாந்திக்காவா பத்தி நான் சொல்லல.

சௌரம்

சௌரம் கணக்கிடப்படுரது நம்ம இஷ்ட கரணனின் தந்தை சூரிய பகவானின் போக்கைக் கொண்டு இந்த வருடம் கணக்கிடப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளான மேஷம் ரிஷபம் முதல் கும்பம் மீனம் வரை ஒவ்வொன்றாக சூரியனின் போக்கு மாறி வருவதை ஒவ்வொரு மாதமாக 12 மாதங்கள் கொண்டது சௌர வருடம். நம் தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றை மாதப்பிறப்பு கொண்டாடுவது இந்த சாஸ்திரத்தின்படி தான்.  இதுதாங்க கணக்கு இப்ப கூட்டி கழிச்சுப்பாருங்க கணக்கு கிளியரா இருக்கா, நீங்கள் 90 கிட்ஸ்னா சௌரம் என்றால் நம்ம சௌர கங்குலி பெயர் வச்சு நினைவில வையுங்கனு சொல்லியிருப்பேன் .

  1. சித்திரை: மேஷம்
  2. வைகாசி: ரிஷபம்
  3. ஆனி: மிதுனம்
  4. ஆடி: கடகம்
  5. ஆவணி: சிம்மம்
  6. புரட்டாசி: கன்னி
  7. ஐப்பசி: துலாம்
  8. கார்த்திகை: விருச்சிகம்
  9. மார்கழி: தனுசு
  10. தை: மகரம்
  11. மாசி: கும்பம்
  12. பங்குனி: மீனம்

மீனம் முடிந்து மேஷத்திற்கு மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பமாகிறதை வருடப்பிறப்பாக (ஸம்வத்ஸரம்) கொண்டாடுகிறோம்.

சாந்திரம்

அதே போல் சந்திர பகவானின் போக்கைக் கொண்டு கணக்கிடப்படுவது சாத்திரமான வருடம். தெலுங்கு மற்றும் கன்னட தேசத்தில் வசிப்பவர்கள் இந்த சந்திர வருஷத்தை பின்பற்றுகின்றனர். நாம் கொண்டாடும் ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகள் சாந்திர வருஷத்தை ஒட்டியே வருகிறது. அதுக்குத்தான் இங்க ராம நவமி இங்கு கொண்டாடப்படுகின்றது.

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் (பிரதமை) அன்று சாந்திர வருடப்பிறப்பு நிகழ்கிறது. தெலுங்கு வருடப் பிறப்பை யுகாதி என்று பெயரிட்டு கொண்டாடுகின்றனர். பெயர்க்காரணம் என்னவென்றால் யுகம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

நாக்ஷத்ரம்

நட்சத்திரங்களான அஸ்வினி முதல் ரேவதி வரை ஆகிய இருபத்தி ஏழும் 27 நாட்கள் ஒரு மாதம் என்று 12 மாதங்கள் கொண்டது நாக்ஷத்ர வருஷம். இது நமக்கு கொஞ்சமாவது பரிட்சையமாகியிருக்கும்.

பார்ஹஸ்பத்தியம்

பிரஹஸ்பதியான குரு பகவான் ராசி மாறுதல் வைத்து கணக்கிடப்படுவது பார்ஹஸ்பத்தியம்.

இவ்வாறு ஐந்து விதமான வருடப்பிறப்புகள் கணக்கிடப்படுகிறது. இறுதியாக கூறிய இரண்டு வகைகளான நாக்ஷத்ரம் மற்றும் பார்ஹஸ்பத்தியம் ஆகியவை தர்ம சாஸ்திரத்தில் உபயோகமில்லை என்பதால் மேற்கூறிய மூன்று வகையான ஸாவனம், சௌரம், சாந்திரம் வருஷங்களே ஆசாரத்தில் உள்ளது.

அப்பேர்ப்பட்ட வருடப் பிறப்பிற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

ஒரு தட்டில் அல்லது தாம்பாளத்தில் காய் கனி புஷ்பம் ஆபரணம் பணம் புத்தாடை அரிசி பருப்பு கண்ணாடி பஞ்சாங்கம் ஆகியவற்றை ரம்யமாக அலங்கரித்து சுவாமி அறையில் வைத்து அதன் முன் நாம் அன்று கண் விழிக்க வேண்டும். அந்தநாள் மங்களகரமாக துவங்க அந்த வருடமும் சுபிக்ஷமாக இருக்கும்.

பஞ்சாங்கப் படனம்: நல்ல நேரம் பார்த்து அந்த பஞ்சாங்கத்தை எடுத்து பெரியோர்கள் யாரேனும் அதனை வாசித்து நாம் கேட்க வேண்டும். அந்த வருடத்தில் இருக்கும் அனைத்து சுபகாரியங்களில் நாள் கிழமைகள் மற்றும் அந்த வருடத்தின் பலஸ்ருதி அறியவும்.

நிம்ப குசும பக்ஷணம்:

வேப்பம்பூ உண்ணுதல். வருடப் பிறப்பிற்கு மிகவும் முக்கியமான ஒரு பதார்த்தம் மாங்காய் பச்சடி. எப்பொழுதும்போல் மாங்காய் பச்சடி செய்தபின் வேப்பம்பூ கடுகை மற்றும் காய்ந்த மிளகாய் கொண்டு தாளிக்கவும். இதன் விசேஷம் என்னவென்றால் மாங்காயின் புளிப்பு, வெல்லத்தின் இனிப்பு, கடுகின் துவர்ப்பு, காய்ந்த மிளகாயின் காரம், வேப்பம்பூவின் கசப்பு என்று எல்லா விதமான சுவைகளும் கூடிய அந்த பதார்த்தத்தை போல் நாம் வாழ்க்கையும் இருக்கும் என்னும் தத்துவத்தை உணர்த்தக் கூடியது.

நம் முன்னோர்கள் கணிப்பு என்றால் இதுதான் இதற்கு பெயர்தான் வானவியல் சாஸ்திரம் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *